(எம்.எம்.சில்வெஸ்டர்)
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் இலங்கை அணி தனது கடைசி போட்டியில் போட்டி ஏற்பாடு நாடான மேற்கிந்தியத் தீவுகள் அணியை இன்றைய தினம் எதிர்கொள்கிறது.
டி குழுவுக்கான புள்ளிப் பட்டியல் விபரம்
செய்ன்ட் கிட்ஸ் அண்ட் செவிஸின் பெஸ்ஸட்ரேவில் நடைபெறவுள்ள தீர்மானமிக்க இப்போட்டி இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
டி குழுவில் இடம்பெற்றுள்ள துனித் வெல்லாலகே தலைமையிலான இலங்கை அணியானது, தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் (ஸ்கொட்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா) இலகுவாக வென்றுள்ளதுடன், இன்றைய தினம் மேற்கிந்தியத் தீவுகளை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.
டி குழுவுக்கான புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இலங்கை அணியானது, 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 1.010 என்ற நிகர ஓட்ட வேகத்தைக் கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியா 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும், அவ்வணியின் நிகர ஓட்ட வேகம் 0.096 ஆக காணப்படுகின்றமை பாதகமாக அமைகிறது.
ஏனெனில், இன்றைய தினம் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் இறுக்கமான வெற்றியை பெற்றுவிட்டால், இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஒரு வேளை மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியடைந்தால் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.
இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை அணியை அதிகூடிய ஓட்டங்கள் மற்றும் பந்துகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டினால், அதாவது இலங்கை அணியானது அவுஸ்திரேலியாவின் நிகர ஓட்ட வேகத்தைக் காட்டிலும் (0.096) குறைவான ஓட்ட வேகத்துக்கு தள்ளப்பட்டுவிட்டால், மேற்கிந்தியத் தீவுகள் அணியும், அவுஸ்திரேலியா அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.
எவ்வாறாயினும், இலங்கை அணியின் ஓட்ட வேகம் சிறந்த நிலையில் காணப்படுவதால், இலங்கை அணி தோல்வியடைந்தாலும் பாரிய வித்தியாசத்தில் தோற்காமல் சிறிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். இருப்பினும், இலங்கை அணி வெற்றிக்காக போராடி வெற்றியை பதிவு செய்யவே விரும்பும். அது இலங்கை அணிக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM