தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 110 ரூபாவால் அதிகரிக்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போது 620 ரூபாவாக உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 730 ஆக அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.