கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (20-01-2022) இரவு ஏற்பட்ட பாரிய தீ விபத்து  பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  நேற்று (20-01-2022) நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து  பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

தொடர்ந்து இராணுவ தீயணைப்பு பிரிவினரும் களத்தில் இறங்கி மேலும் தீ பரவாத வகையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த தீ விபத்து சம்பவத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர், இராணுவ உயர் அதிகாரிகளின் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் கண்காணிப்பில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் குறித்த விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்

இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன், வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் மற்றும் வைத்தியர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இதேவேளை குறித்த தீ விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயவியல் பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.