கேள்வி : நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை தற்­போ­தைய அர­சாங்கம்  முன்­வைக்கும் பட்­சத்தில் அதற்கு நீங்கள் ஆத­ர­வ­ளிப்­பீர்­களா?

பதில் : இந்தப் பிரச்­சி­னையை இன­ரீ­தி­யாக பிள­வு­ப­டுத்தி பார்க்க முடி­யாது. அனை­வரும் ஒத்துப் போகின்ற வகை­யிலும் மகிழ்ச்­சி­ய­டை­கின்ற வகை­யிலும் அமை­யப்­பெற வேண்டும். ஒரு இனம் மகிழ்ச்­சிய­டை­கின்ற அதே சமயம் மற்­று­மொரு இனம் வேத­னை­ய­டை­வ­தாயின் அதனை ஏற்­றுக்­கொள்ள இய­லாது. வடக்கு கிழக்கு பிரச்­சி­னையை எடுத்­துக்­கொண்டால் கிழக்கில் உள்ள சிலர் இணைய வேண்டும் என கூறு­கின்­ற­நி­லையில் மற்­று­மொரு தரப்பு இணைய முடி­யாது எனக் கூறு­கின்­றது. நாட்டின் அபி­வி­ருத்­திக்கு இது ஒரு­போதும் சாத்­தி­யப்­ப­டாது. நாடு அபி­வி­ருத்­தி­ய­டைய வேண்­டு­மாயின் அனைத்து இன மக்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். குறு­கிய அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக செயற்­ப­டு­வது முறை­யல்ல. பிர­தான அர­சியல் கட்­சிகள் அர­சியல் நல­னுக்­காக இந்த விட­யத்தை கையாள்­வது முறை­யல்ல. 

கேள்வி : புதிய அர­சி­ய­ல­மைப்பு ஊடாக தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு முன்­வைக்­கப்­பட்டால் அதற்கு ஆத­ர­வ­ளிப்­பீர்­களா?

பதில் : தீர்வு என்­ன­வென்­பதை முதலில் நாங்கள் அறிய வேண்டும். தீர்வுத்திட்­டத்தை அறி­யாது என்னால் பதி­ல­ளிக்க முடி­யாது. 

கேள்வி : விமல் வீர­வன்ச போன்­ற­வர்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பை முன்­வைப்­ப­தற்கு முன்­னரே விமர்­சிக்­கின்­ற­னரே?

பதில் : அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிப்­ப­தற்­காக லால் விஜ­ய­நா­யக்க தலை­மையில் குழு­வொன்றை ஸ்தாபித்­துள்­ளனர். அந்­தக்­கு­ழு­வி­னரால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள சில விட­யங்­களை ஏற்­றுக் ­கொள்ள முடி­யாது. இதனால் இனங்கள் ஒன்­றி­ணை­யாது. மாறாக மென்­மேலும் பிள­வு­க­ளுக்கு உட்­படும். 

அந்த குழு மத­வா­தத்தை தூண்டும் வகை­யிலும் சில விட­யங்­களை குறிப்­பிட்­டுள்­ளது. அவர்கள் செயற்­படும் விதமும் தெரி­விக்கும் கருத்­துக்­க­ளுமே சர்ச்­சை­க­ளுக்கு கார­ண­மா­கி­யுள்­ளது. ஆனால் புதிய அர­சி­ய­ல­மைப்பை விட நடை­மு­றையில் உள்ள அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை கொண்டு வரு­வதன் மூலம் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடியும் என்­பதே எனது நிலைப்­பாடு ஆகும். 

கொல்வின் ஆர்.டி. சில்வா அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்க மூன்று வரு­டங்கள் சென்­றது. பாரா­ளு­மன்­றத்தில் அன்று நான் இளைய உறுப்­பி­ன­ராக அங்கம் வகித்தேன். அன்று மீனவர் பிரச்­சி­னை­க­ளுக்­காக ஒன்­றி­ணைந்து போராட்­டங்­களை கூட நடத்­தினோம். எனவே புதிய அர­சி­ய­ல­மைப்­பாக கொண்டு வரு­வதை திருத்­தங்­க­ளாக முன்­வைப்­பதை சிறந்த விட­ய­மாக கரு­து­கின்றேன். அர­சி­ய­ல­மைப்புச் சபை என பல்­வேறு விட­யங்கள் குறித்து கருத்­துக்கள் தெரி­விக்­கின்ற நிலையில் எந்­த­வொரு இறு­தி­யான நிலைப்­பாட்­டுக்கும் அர­சாங்கம் வர­வில்லை. எனவே நாங்கள் நடப்­ப­வற்றை வேடிக்கை பார்க்­கின்றோம். நாட்டை பிள­வுப்­ப­டுத்தி பிரச்­சி­னையை தீர்க்க முடி­யாது. ஏன் என்றால் இது ஒரு சிறிய நாடு.  

கேள்வி : கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அடைந்த தோல்­வியின் பின்னர் இரா­ணுவ சூழ்­சி­யினூடாக ஆட்­சியை தக்­க­வைத்­துக்­கொள்ள முயற்சித்ததாக குற்­றச்­சாட்­டுக்கள் காணப்­ப­டு­கின்­றது. 

பதில் : சூழ்ச்சி செய்­தி­ருந்தால் இன்றும் நான் அதி­கா­ரத்தில் இருந்­தி­ருப்பேன். எனவே இது­வொரு அர­சியல் பொய்.

கேள்வி : பிர­தமர் அந்த சந்­தர்ப்­பத்தில் உங்­க­ளுடன் தொடர்பில் இருந்த­தா­கவும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. இதன் உண்மை தன்மை என்ன?

பதில் : தேர்தல் தோல்­வியை அறிந்த பின்னர் உரிய முறையில் ஒப்­ப­டைத்­து­விட்டு வெளியே­று­வ­தற்­கா­கவே நான் அந்த சந்­தர்ப்­பத்தில் செயற்­பட்டேன். தேர்தல் முடி­வுகள் வெளிவ­ரு­வ­தற்கு முன்பே அங்­கி­ருந்து நான் சென்று விட்டேன். காலையில் ஆறு மணி­ய­ளவில் ஒப்­ப­டைத்­து­விட்டு சென்றேன்.  பல வருட கால­மாக செயற்­பாட்டு அர­சி­யலில் ஈடு­பட்டு இருந்­த­மையால் மக்கள் அலை எவ்­வாறு காணப்­ப­டு­கின்­றது என்­பதை எம்மால் உணர முடிந்­தது. சிலர் கூற வேண்டாம் என்று கூட என்­னிடம் கேட்டு கொண்­டனர். ஆனால் நான் இல்லை அவ்­வாறு வேண்டாம் உரிய முறையில் ஒப்­ப­டைத்து விட்டு செல்வோம் என்றே கூறினேன்.

கேள்வி : தேர்தல் தோல்­விக்கு பிர­தான காரணம் எது­வென நீங்கள் கரு­து­கின்­றீர்கள்?

பதில் : போலி­யான பிர­சா­ரங்­களே தோல்­விக்கு பிர­தான கார­ண­மாக அமைந்­தது. மக்கள் மத்­தியில் எமக்கு எதி­ராக உண்­மைக்கு புறம்­பான தக­வல்­களை பரப்­பியும் வெறுப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுமே செயற்­பட்­டனர்.

கேள்வி : உரிய காலத்­துக்கு முன்­னரே தேர்­தலை வைத்­த­மையேன்? அத­னை­யிட்டு தற்­போது வேத­னை­ய­டை­கின்­றீர்­களா?

பதில் : ஒரு­போதும் இல்லை. சில சந்­தர்ப்­பங்­களில் அவ்­வாறு தோன்றும். 

கேள்வி : சிறு­பான்மை இன மக்­களின் வாக்­குகள் குறை­வ­தற்கு என்ன காரணம்?

பதில் : ஏற்­க­னவே நான் கூறி­யது போன்று போலி­யான பிர­சா­ரங்கள் தான். முஸ்லிம் மக்கள் மத்­தியில் சென்று என்ன கூறி­னார்கள். அதே­போன்று "கிறீஸ்­பூதம்" விவ­காரம், எனவே திட்­ட­மிட்ட செயற்­பா­டு­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனால் இந்த சூழ்ச்சி இலங்­கையில் மாத்­திரம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. சில வெளிநா­டு­களும் தொடர்புபட்­டி­ருந்­தன. பல வரு­டங்­க­ளாக இந்த சூழ்ச்சி திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. முஸ்லிம் மக்கள் மத்­தியில் எம்மை தவ­றாக சித்­த­ரித்­தனர். ஆனால் உண்மை நிலையை தற்­போது உணரக் கூடி­ய­தாக உள்­ளது. 

2011ஆம் ஆண்­டி­லி­ருந்து இந்த சூழ்ச்சி முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் கூறு­கின்­றனர். சிலர் ஆட்சி கவிழ்ப்பை பெரும் சாத­னை­யாக வெளிப்­ப­டுத்தி புத்­த­கங்கள் கூட அச்­சி­டு­கின்­றனர். மேலும் சிலர் தாம் தான் அதற்கு காரணம் என கூறி புத்­த­கங்­களில் எழு­து­கின்­றனர். ஆனால் நாங்கள் அவற்றை எதிர்­கொள்­ள­வில்லை.

கேள்வி : சிறு­பான்­மையின மக்­களின் வாக்­குகள் கிடைக்­கப் ­பெ­றாது என தேர்­த­லுக்கு முன்னர் பலர் தெரி­வித்­தி­ருந்­தனர். இருந்தும் நீங்கள் தேர்­தலை நடத்­தி­னீர்­களே?

பதில் : நான் அதனை நம்­ப­வில்லை. காரணம் அவ்­வாறு இடம்­பெற வாய்ப்பு இல்லை. தமிழ் மக்­க­ளுக்கு சுதந்­திரம் எவ்­வாறு கிடைத்­தது. வடக்கு மக்­க­ளுக்கு சுதந்­திரம் எவ்­வாறு கிடைத்­தது என்று கூறுங்கள். சுதந்­தி­ர­மாக நட­மாட, எழு­து­வ­தற்கு உங்­க­ளுக்கு இப்­போது முடிந்­தது என்று கூறுங்கள் பார்ப்போம். மறந்து விட்­டீர்கள். தமிழ் மக்­க­ளுடன் நாங்கள் போர் செய்­ய­வில்லை. தவ­றான கருத்­துக்­க­ளையே பரப்­பி­னார்கள். 

கேள்வி : ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­த­மைக்கு இந்­தியா ஒரு காரணம் எண்ணு­கின்­றீர்­களா?

பதில் : வெளிநா­டு­களின் தொடர்பு குறித்து நான் பேச விரும்­ப­வில்லை. எனவே தான் பெயர்­களை கூறாமல் சென்றேன். 

கேள்வி : அந்தக் காலப்­ப­கு­தியில் சீனா­வுடன் நெருங்­கிய நட்பை வைத்­தி­ருந்­தீர்­களே..

பதில் : நான் எந்த நாட்டை முதன்­மை­யாக கொண்டு செயற்­பட வேண்டும்? இந்­தி­யாவா? சீனாவா? அமெ­ரிக்­காவா? இலங்­கையா? என கூறுங்கள் பார்ப்போம். இலங்கை தொடர்­பாக நாம் சிந்­தித்து செயற்­பட வேண்டும். இலங்­கையின் அபி­வி­ருத்தி தொடர்பில் நான் செயற்­பட வேண்டும். 

இந்த விட­யத்தில் எனக்கு சீனா இந்­தியா மற்றும் அமெ­ரிக்கா என அனை­வரும் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­னார்கள். தற்­போ­தைய அர­சாங்கம் எங்கு செல்­கின்­றது. சீனா­விற்கு பின்னால் தான் ஓடு­கின்­றது. அவர்கள் வழங்­கிய நிதியை பெற்­றுக்­கொண்டு அபி­வி­ருத்தி பணி­களை முன்­னெ­டுத்­தி­ருந்தால் இன்று நாடு பொரு­ளா­தார நெருக்­க­டி­களை சந்­தி­ருத்­தி­ருக்­காது. சர்­வ­தேச சஞ்­சிகை ஒன்றில் இலங்கையின் கடன்கள் தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டு­ள்­ளது. அதா­வது கடன் எவ்­வ­ளவு என்று தெரி­யாத நிலை­யி­லேயே தற்­போ­தைய அர­சாங்கம் உள்­ளது. படு­மோ­ச­மான நிலையில் நாட்டின் பொரு­ளா­தாரம் காணப்­ப­டு­கின்­றது. இதனால் பாதிக்­கப்­ப­டப்­போ­வது நாட்டு மக்­களே. 

மாத சம்­ப­ளத்தால் வாழ­மு­டி­யாத நிலையே மக்­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் ஏற்­படும். இன்று நாட்டில் காணப்­படும் குற்­றச்­செ­யல்­களின் எண்­ணிக்­கையை பாருங்கள். வரு­மானம் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளி­னாலே இவ்­வா­றான குற்றச் செயல்கள் அதி­க­ரித்­துள்ளன. எனவே இந்த பிரச்­சினை மிகவும் ஆழ­மா­னது. எமது ஆட்சி காலத்தில் மக்கள் கரங்­களில் தாரா­ள­மாக பணம் இருந்­தது. ஆனால் இன்று யாழ்ப்­பாண விவ­சா­யி­களின் நிலை­மையை சென்று பாருங்கள். அதே­போன்று செட்­டி­தெ­ரு­வுக்கு சென்று வியா­பா­ரி­களின் நிலை­மையை பாருங்கள். உண்மை வெளிப்­படும்.

கேள்வி : உங்கள் ஆட்சி காலத்தில் சர்­வ­தே­ச­த்தை பகைத்­துக் ­கொண்ட­தாக குற்­றச்­சாட்டு உள்­ளதே?

பதில் : சர்­வ­தேசம் வேண்­டு­மென்றே எம்மை பகைத்­துக்­கொண்­டதாக கருத முடி­யாது. சில விட­யங்கள் தொடர்­பாக காணப்­பட்ட அழுத்­தங்கள் ஒரு காரணம். இறுதிக் கட்­டப்­போரின் போது பல்­வேறு அழுத்­தங்கள் எமக்கு காணப்­பட்­டது. அவற்­றுக்கு அடி­ப­ணிந்­தி­ருந்தால் போரை முடி­வுக்கு கொண்டு வர முடிந்­தி­ருக்­காது. அவ்­வாறு முடிந்­தி­ருக்­கா­விட்டால் என்னை உங்­க­ளுக்கோ உங்­களை எனக்கோ சந்­தித்­தி­ருக்கும் வாய்ப்பு இருந்­தி­ருக்­காது. ஏன் என்றால் நாட்டில் போர் காணப்­படும் போது அவ்­வாறு சந்­திப்­பு­க­ளுக்கு வாய்ப்பு இல்லை. நீங்கள் என்னை சந்­திக்க அச்­சப்­ப­டு­வீர்கள். நான் உங்­களை சந்­திக்க அச்­சப்­ப­டு­வேன். அவ்­வா­றா­ன­தொரு சூழ்­நிலை நாட்டில் ஏன் ஏற்­பட்­டது. அவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையை நாட்டில் தொடர்ந்தும் வைத்­தி­ருக்க முடி­யாது. ஆக­வேதான் போரை முடி­வுக்கு கொண்டு வந்தோம். போர் முடி­வ­டைந்­த­மையால் தான் அர­சியல் தீர்வு குறித்து பேச முடி­கின்­றது. இதுதான் உண்மை நிலை. 

கேள்வி : போர்க்­குற்றம், சர்­வ­தேச நீதி­மன்றம் மற்றும் மின்­சார கதிரை அச்­சு­றுத்­தல்­க­ளி­ருந்து உங்­களை பாது­காத்­துள்­ள­தாக தற்­போ­தைய அர­சாங்கம் கூறு­கின்­றது. இது குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன?

பதில் : வீண் பேச்­சுக்­களே அவை. அவர்கள் செய்யும் பணிகள் யாருக்கும் தெரி­வ­தில்லை என கூறு­கின்­றனர். ஒரு காலத்­தி­லி­ருந்த மன்­னரின் உடையை போன்­றதே இவர்­களின் செயற்­பாடும்.

கேள்வி : மருத்­துவ சபை மற்றும் பொறி­யியல் துறைசார் நிபு­ணர்கள் இந்­தி­யா­வு­ட­னான எட்கா ஒப்­பந்தம் தொடர்பில் அச்சம் தெரி­விக்­கின்­றனர். இது குறித்த உங்­க­ளது நிலைப்­பாடு என்ன?

பதில் : சேவைத்துறையை மையப்­ப­டுத்தி ஒப்­பந்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்டால் தமிழ் நாட்­டி­லி­ருந்து இலங்­கைக்கு வந்து பணிபு­ரி­வார்கள். அவர்­க­ளுக்கு ஆங்­கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் மொழி நன்கு தெரியும். குறைந்த சம்­ப­ளத்தில் அவர்கள் இங்கு தொழில் செய்­வார்கள். அதே­போன்று தொழி­ல்நுட்­பத்­துறை எடுத்துக் கொண்­டாலும் பாதிப்பு மிக அதி­க­மா­கவே உள்­ளது. இந்த ஒப்­பந்­தத்தின் ஊடாக அதி­க­மாக தமிழ் மக்­களே பாதிக்­கப்­பட போகின்­றனர். வட, கிழக்கில் மஹிந்­தோ­தய தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அதி­க­மாக ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இதன் பலனை தமிழ் இளைஞர் யுவ­திகள் பெற்­றுக்­கொள்ள வேண்டும். ஆனால் ஒப்­பந்­தத்தின் பின்னர் தமிழ் நாடு இன்று குறைந்த சம்­ப­ளத்­திற்கு இங்கு வந்தால் நிலைமை மோச­மா­ன­தா­கவே காணப்­படும். 

தெற்­கிற்கும் இதே நிலைதான். வைத்­தி­யர்கள் மற்றும் பொறி­யி­ய­லா­ளர்கள் போன்­ற­வர்­களின் நிலை­மையும் கேள்விக்குறி­யாகும். பல இலட்சம் பேர் அங்­கி­ருந்து எமது நாட்­டுக்கு வந்து தொழில் செய்­வ­தற்­காக கத­வு­களை திறந்து விடு­கின்றோம். தற்­போதும் இலங்­கையில் பல வர்த்­தக நிலை­யங்­களில் இருப்­ப­வர்கள் யார் என்­பது உங்­க­ளுக்கு தெரியும். சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தத்தை உரிய முறையில் முன்­னெ­டுத்­து­விட்டு எட்கா தொடர்பில் பேச முடியும். 

இதனை செய்­யாது மற்­று­மொரு ஒப்­பந்­தத்தை மேற்­கொண்டு சிக்­கலில் மாட்­டிக்­கொள்ள கூடாது. போரை முடி­வ­டையச் செய்து மக்கள் அபி­வி­ருத்­தி­களை அடை­கின்ற இந்த தரு­ணத்தில் அந்த தொழில் வாய்­பு­க­ளுக்­கான சந்­தர்ப்­பங்­க­ளுக்கு தடை­களை ஏற்­ப­டுத்தும் வகையில் ஒப்­பந்­தங்கள் மேற்­கொள்­ளப்­படக் கூடாது. சுதந்­தி­ர­மாக கல்­வியை முன்­னெ­டுக்கும் இளை­ஞ­னுக்கு தொழி­லுக்­கான வாய்ப்பு இல்­லா­விட்டால் என்ன நடக்கும். இதுவே பிரச்­சினை. ஆகவே இந்த ஒப்­பந்­தத்­தினால் தமிழ் மக்­க­ளுக்கே அதி­க­மாக பாதிப்­புகள் ஏற்­பட போகின்­றது.

கேள்வி : இஸ்­லா­மா­பாத்தில் நடை­பெ­ற­வுள்ள சார்க் மாநாட்­டி­லி­ருந்து வில­கு­வ­தற்கு இலங்கை தீர்­மா­னித்­துள்­ளது. இத­னூ­டாக அர­சாங்கம் தொடர்ந்தும் இந்­தி­யாவின் தேவையை ஈடு செய்­வ­தாக அமை­கின்­றது தானே?

பதில் : அவ்­வாறு நீங்கள் கூறு­கின்­றீர்கள். சிந்­தித்து செயற்­பட வேண்டும். எமக்கும் அவ்­வா­றான ஒரு சூழ்­நிலை காணப்­பட்­டது. அப்­போதும் அந்த நாடுகள் என்­னிடம் வந்து கலந்­து­ரை­யா­டி­யது. ஆகவே இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் பொறு­மை­யாக இருந்­தி­ருக்க வேண்டும். அறிக்­கையை வெளியிட்­டி­ருக்க கூடாது. அவ­ச­ரப்­பட்­டி­ருக்க தேவை­யில்லை. எப்­ப­டியும் அந்த மாநாடு ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருக்கும். ஆனால் தற்­போது என்ன நடந்­துள்­ளது. காலையில் இலங்கை அறிக்­கையை வெளியிடும் போது மாலையில் அவர்கள் மாநாட்டை ஒத்­தி­வைத்து விட்­டனர். எனவே சர்­வ­தேச கொள்­கைகள் தொடர்பில் இதனை விட சிந்­தித்து பொறுப்­பு­ணர்­வுடன் செய­ற்­பட வேண்டும். சீனாவை பகைத்­து­கொண்­டனர். ஆனால் நான் சீனாவை பகைத்­துக்­கொள்­ள­வில்லை.  பொரு­ளா­தார நன்­மைகள் அதி­க­ளவு கிடைக்கும் நாடு சீனா. இந்­தி­யாவை நான் பகைத்­துக்­கொண்­ட­தாக கூறு­கின்­றனர். நான் பகைத்­துக்­கொள்­ள­வில்லை. 

போரை வெற்­றிக்­கொள்ள எனக்கு இந்­தியா ஒத்­து­ழைப்பு வழங்­கி­யது. அதே­போன்று பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியில் இந்­தியா எனக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யது. ஆனால் தேர்தல் தோல்­விக்கு செயற்­பட்டதா என்று தெரி­ய­வில்லை. அவ்­வாறு செயற்­பட்டும் இருக்­கலாம். ஆனால் முக்­கி­ய­மான இரண்டு விட­யங்­க­ளான பயங்­க­ர­வாத ஒழிப்பு மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியில் இந்­தியா கூடிய ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­யது. ஆனால் தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கு எந்­த­வொரு ஒத்­து­ழைப்­பு­க்களும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. பகைத்­துக்­கொண்­டுள்­ளனர். சார்க் வல­யத்தில் இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­மாயின் சமா­தா­னப்­ப­டுத்த செயற்­பட வேண்­டுமே தவிர பக்­கச்­சார்­பாக செயற்­பட கூடாது. இந்­தி­யாவும் பாகிஸ்­தானும் இலங்­கைக்கு நல்ல நண்­பர்கள். ஆகவே இந்த இரு நாடு­களும் மோது­கின்ற நிலையில் சமா­தா­னப்­ப­டுத்த செயற்­பட வேண்டும். மாறாக மேலும் பிள­வுப்­ப­டுத்த கார­ண­மா­கி­விடக் கூடாது. 

கேள்வி : துறை­முக நகர்த் திட்டம் தொடர்­பாக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் உங்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­க­பட்­ட­னவே?

பதில் : தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட விட­யங்­களே அவை. தற்­போது புது­ப்பிக்­கப்­பட்­டுள்ள துறை­முக நகர் ஒப்­பந்தம் சீனா­வுக்கு நன்மை தரு­வ­தாக அமைகின்­றது. முன்பு இருந்­ததை விட அதி­க­ள­வான நிலப்­ப­ரப்பு சீனா­விற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. 

கேள்வி : துறை­முக திட்­டத்­துக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வீர்­களா?

பதில் : ஒப்­பந்தம் தொடர்பில் எனக்கு பிரச்­சினை இல்லை. ஆனால் இரு நாட்டு ஜனா­தி­ப­திகள் கைச்சாத்­திட்ட ஒப்­பந்­தத்தை இரத்துச் செய்­துள்ள முதல் நாடு இலங்­கை­யாகும். உலகில் முதற் தட­வை­யாக இவ்­வா­றான ஒரு நிலை ஏற்­பட்­டுள்­ளது. நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்­காக எந்த செலவும் எமது சார்பில் இல்­லாத நிலையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. மக்­க­ளுக்கு போலி­யான பிர­சா­ரங்கள் செய்து திட்­டத்தை குழப்­பி ­விட்­டனர். நாட்டில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு அர­சாங்­கத்தின் இவ்­வா­றான செயற்­பா­டுகள் முக்­கிய கார­ணங்­க­ளாகும். முட்­டாள்­த­ன­மான செயற்­பா­டுகள்.

கேள்வி : அர­சாங்­கத்­திற்கு எதி­ராக பல்­வேறு போராட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றது. தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் சம்­பள உயர்வை வலி­யு­றுத்தி கொழும்பில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில் : உழைக்கும் மக்­க­ளுக்கு உரிய வரு­மானம் இல்­லா­விட்டால் வாழ்­வா­தார பிரச்­சினை ஏற்­படும். இதனால் அவர்கள் போராட்­டத்தில் ஈடு­ப­டு­வார்கள். வற் வரி அதி­க­ரிக்­கப்­பட்டால் இந்த நிலைமை இன்னும் மோச­ம­டையும். 15 ஆம் திக­திக்கு பின்னர் அதனை உங்­களால் உணர முடியும். பத்­தி­ரி­கை­க­ளுக்கும் வற் வரி விதிக்­கப்­படும். இதனால் பத்­தி­ரி­கையின் விலை அதி­கரிக்­கப்­பட்டு வாச­கர்­களின் எண்­ணிக்கை குறை­வ­டையும். இதன்­ வி­ளை­வாக உங்­களின் மாதச் சம்­பளம் வீழ்ச்­சி­ய­டையும். எனவே போலி­யான விட­யங்­களை கொண்டே அர­சாங்கம் ஆட்­சியை முன்­னெ­டுக்க முற்­ப­டு­கின்­றது. குறு­கிய கால நன்­மைகள் கிடைக்­குமே ஒழிய எவ்­வித பலனும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. 

கேள்வி : உங்கள் தலை­மையில் புதிய கட்சி உரு­வாக உள்­ள­தாக கூறு­வது உண்­மையா?

பதில் : நான் கட்சி ஒன்றை ஸ்தாபிக்­க­மாட்டேன். அர­சாங்கம் அனை­வ­ரையும் விரட்­டு­கின்­றது. மக்கள் கட்­சி­ஒன்றை உரு­வாக்கும் நிலையே இன்று ஏற்­பட்­டுள்­ளது. 

கேள்வி : நாட்டின் பொரு­ளா­தார வீழ்ச்­சிக்கு ராஜ­பக் ஷ குடும்பம் காரணம் என குற்­றச்­சாட்டு உள்­ளதே?

பதில் : பொய். நாங்கள் பெற்­றுக்­கொண்ட கட­னுக்கு செய்த அபி­வி­ருத்தி வேலைகள் உங்கள் கண் முன் காணப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் எந்தப் பகு­திக்கு சென்று வேண்­டு­மென்­றாலும் பாருங்கள். நாங்கள் மேற்­கொண்ட  அபி­வி­ருத்தி பணி­களை காணலாம். ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் முன்­னெ­டுத்த ஒரு அபி­வி­ருத்தி விட­யத்­தை­யேனும் கூறுங்கள் பார்க்­கலாம். ஒன்றும் இல்லை. 

கேள்வி : உங்­க­ளது ஆட்சிக் காலத்­திலும் தற்­போ­தைய ஆட்­சியின் கீழும் காணப்­படும் ஊடக சுதந்­திரம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன? ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொலை உங்­க­ளுடை ஆட்­சிக்­கா­லத்தில் அதிகம் இடம்­பெற்­ற­தாக குற்­ற­ச்சாட்­டுக்­களும் உள்­ள­னவே?

பதில் : இல்லை. தற்­போது ஊடக சுதந்­திரம் என்ற சொல் மாத்­தி­ரமே காணப்­ப­டு­கின்­றது. உங்­களால் தற்­போது சுதந்­தி­ர­மாக எழுத முடி­யாது. தொலைக்­காட்­சி­க­ளுக்கு சுதந்­தி­ர­மாக செய்­தி­களை தெரி­விக்க முடி­யுமா. எனது ஆட்சிக் காலத்தில் அவ்­வாறு இருக்­க­வில்லை. பத்­தி­ரி­கை­களை எடுத்து பாருங்கள். எனக்கு எதி­ராக எத்­தனை செய்­திகள் வெளிவந்­துள்­ளன என்று. தற்­போது மிக எளி­தாக ஊட­க­வி­ய­லா­ளர்கள் பெயர் கூறி எச்­ச­ரிக்கப்படு­கின்­றனர். இவ்­வாறு எச்­ச­ரிக்­கப்­பட்டால் சுதந்­தி­ர­மாக செயற்­பட முடி­யுமா?

கேள்வி : ஆனால் உங்கள் ஆட்சிக் காலத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கடத்தல் கொலை அதி­க­மாக காணப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில் : அவ்­வாறு இல்லை. அது குறித்து விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. விசா­ரணை முடிவில் உண்மை வெளிவரும். ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தில் அந்த கொலை­களை யார் செய்­தார்கள் என்று கூறி­யுள்ளார். தற்­போது கூறு­வ­தில்லை. அவர்கள் இன்று ஒன்­றாக உள்­ளார்கள். 

கேள்வி : தமிழ் முஸ்லிம் வாக்­குகள் கிடைக்­கா­மை­யி­னாலே ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தீர்கள். மீண்டும் சிறுபான்மையின் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியுமா என கருதுகின்றீர்களா?

பதில் : முடியும். முஸ்லிம் மக்கள் மாத்­தி­ரமல் தமிழ் மக்­களின் ஆத­ர­வையும் என்னால் பெற்­றுக்­கொள்ள முடியும். தற்­போது இடம்­பெறும் செயற்­பா­டுகள் ஊடாக உண்மை நிலையை உணர்ந்து கொண்­டுள்­ளனர். அந்த மக்­களின் சிந்­த­னை­களில் மாற்றம் ஏற்­படும். ஏன் என்றால் நாங்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்­காக நேர்­மை­யாக செயற்பட்டோம்.

கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பதாக உங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இது குறித்து விளக்க முடியுமா?

பதில் : பொய். கட்சி மாறுபவர்கள் கூறும் கதையே அது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மாத்திரம் ஸ்தாபிக்கவில்லை. எனது தந்தையும் அதன்போது இருந்தார். நாங்கள் அன்று தொடக்கம் இன்று வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர். கட்சியை கட்டியெழுப்பியவர்கள் நாங்கள். ஐக்கிய தேசியக் கட்சியிடம் திருட்டுத்தனமாக ஒப்பந்தங்களை மேற்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தோல்வியடைய செய்தனர். அது போதாதன்று 129 பேர் இருந்த கட்சிக்கு பிரதமர் பதவி வழங்காது 43 பேரை கொண்ட ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கினார்கள். அது தவறு. வழங்கியதும் தவறும். பெற்றுக்கொண்டதும் தவறு. 

கேள்வி : அதிகாரத்தை கைப்பற்ற இனவாதத்தை கையாள்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது?

பதில் : நான் இனவாதத்துக்கு எதிரானவன். ஆட்சியை கைப்பற்ற மக்கள் எதிர்கொள்ளும் பட்டிணியையும் ஏனைய வாழ்வாதார பிரச்சினைகளை கூறினால் மாத்திரமே போதுமானது. ஆனால் யாராவது இனவாதம் பேசினால் ஏன் இந்த நிலைமை என்பதை நாங்கள் விமர்சிப்போம். ஏன் என்றால் எனக்கு இனவாதத்தை தூண்ட முடியாது. எனது வீட்டின் நிலையும் அது தான். ஏன் என்றால் எனக்கு யாழ்ப்பாணத்திலும் உறவினர்கள் இருக்கின்றனர்.

கேள்வி : விடுதலைப்புலி இயக்கத்தில் மற்றும் ஆட்லறி மற்றும் தற்கொலை குண்டுதாரிகள் இருக்கும் போது தான் தோல்வியடைய செய்தீர்கள். மீண்டும் புலிகள் வருவதாக உங்கள் கட்சியில் உள்ளவர்கள் கூறுகின்றீர்களே?

பதில் : இது ஒரு சாதா­ரண அச்­ச­மாகும். இலங்­கையில் அந்த அச்­சு­றுத்தல் இல்லை என்­றாலும் சர்­வ­தே­சத்தில் காணப்­ப­டு­கின்­றது. அனை­வரும் புனர்­வாழ்வு பெற்­றுள்­ளனர். எல்லா பிரச்­சி­னை­களும் தீர்ந்து விட்­டது என்று கூறி விட முடி­யாது. தற்­கொலை குண்­டு­தா­ரிகள் இல்­லை­யென உங்­களால் கூற­மு­டி­யுமா? அந்த உத்­த­ர­வா­தத்தை என்னால் தர­மு­டி­யாது. ஆக­வேதான் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறு கூறினேன். எனவே இது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். மோச­மான நிலைமை ஏற்­ப­டா­த­வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே கூறுகின்றோம். 

கேள்வி : அரசியலிலிருந்து எப்போது ஓய்வு பெறப்போகின்றீர்கள்?

பதில் : உண்­மை­யா­கவே நான் அர­சி­ய­லி­ருந்து ஓய்வு பெறவே விரும்­பினேன். ஆனால் மக்கள் அனு­ம­திக்­க­வில்லை. பல மைல் தூரம் காத்­தி­ருந்து நாட்டின் நான்கு திசை­யிலும் இருந்து ஊருக்கு வந்து சுகம் விசா­ரித்து சென்­றனர். வவு­னியா மற்றும் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து இருந்து கூட மக்கள் வந்­தனர், அது­போன்று என்னை திருடன் திருடன் என இந்த அர­சாங்கம் கூறு­கின்­றது. அதற்கு பதி­ல­ளிக்கச் சென்று மீண்டும் என்னை அர­சி­யலில் ஈடு­பட இந்த அர­சாங்கம் வைத்­து­விட்­டது. எனவே மக்கள் என்னை ஓய்­விற்கு அனுப்­பு­வ­தாக இல்லை. இரத்­தி­ன­பு­ரியை போன்று யாழ்ப்­பா­ணத்­திலும் கூட்டம் ஒன்றை நடத்­துவோம். அப்­போது மலே­ஷி­யாவில் இடம்­பெற்­றதை போன்று கறுப்பு கொடி போராட்­டங்கள் காணப்­ப­டுமா என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு செல்வோம்.