அரசாங்கம் பெற்றுக்கொண்ட ஆணையைவிட தமிழர்கள் எமக்களித்த ஆணை மேலானது : ஜனாதிபதிக்கு நினைவூட்டுகிறார் கஜேந்திரகுமார்

Published By: Digital Desk 4

20 Jan, 2022 | 09:37 PM
image

(ஆர்.யசி)

தமிழர் தேசத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் எமக்கு கொடுத்த ஆணையானது அரசாங்கங்கள் பெற்றுக்கொண்ட ஆணையை விடவும் மேலானது என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே தமிழர் ஆணையை மீறி கொள்கையை வெளியில் வைத்துவிட்டு வரத்தயாரில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார்.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்குமென எமது மக்களுக்கு நம்பிக்கை  இல்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20)  இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம்  நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு இன்று முகங்கொடுத்து வருகின்றோம்.

அரசாங்கம் இப்போது தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ளாது போனால் விரைவில் நாடு வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்படும்.

கடன்களை செலுத்திக்கொண்டிருக்க முடியும் ஆனால் கையிருப்பு வீழ்ச்சிகாணும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே அதற்கானவேணும் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

மேலும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததற்கான காரணம் என்ன என்பதை தெரிவிப்பார் என எதிர்பார்த்தோம். ஒருவார காலத்திற்கு பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

ஆனால் மீண்டும் பாராளுமன்றம் கூடிய வேளையில் ஏன் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார் என்பதற்காக பதில் தெரிவிக்கவில்லை. பொருளாதார நெருக்கடியே இன்று நாடு எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினையாகும். 

ஆனால் பொருளாதார நெருக்கடிக்காக அவ்வாறு செய்யவில்லை. எனினும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண  கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்களை செய்யாது தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாது. ஒரே விடயத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதால் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை.

அதேபோல் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் ஜனாதிபதிக்கு மாற்று சிந்தனையொன்று இருக்கும் எனவும், அது அவரது மனதில் இருந்து வெளிவரும் எனவும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளாக நாம் ஜனாதிபதியின் உரையில் எதிர்பார்த்தோம்.

குறிப்பாக பாராளுமன்றம் மீண்டும் கூடிய வேளையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை உருவாக்குவது,  சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இறுதியாக உருவாக்கப்பட்ட மூன்று அரசியல் அமைப்புகளையும் தமிழர்கள் நிராகரித்த நிலையில், அல்லது தமிழர்கள் முழுமையாக நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 74 ஆண்டுகளாக நாடு அடிப்படை கட்டமைப்பில்  பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் அதனை தீர்க்கும் விதமாக ஜனாதிபதியின் உரை இருக்கும் என எதிர்பார்த்தோம்.

அதுமட்டுமல்ல யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார ரீதியில், கல்வி, தொழில் வாய்ப்பு, சந்தைவாய்ப்பு, சுயதொழில், குடிநீர் மற்றும் விவசாயம், வீடு, வீதிகள், வைத்தியசாலைகள் என்பவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கூறினார்.

இதற்காக வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் தமது கொள்கைகளை தற்காலிகமாக கைவிட்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தில் ஆட்சியை அமைத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆட்சியமைத்துள்ளனர். 

ஆனால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எதிர்கட்சியின் ஆசனங்களில் அமர,  தமிழ் மக்களின் ஆணையை கேட்ட வேளையில், சமஷ்டி முறையில் தீர்வுகளை பெறுவது மற்றும் தமிழர் தேசத்தை அங்கீகரிக்க தமிழ் மக்கள் எமக்கு கொடுக்க ஆணையானது அரசாங்கங்கள் பெற்றுக்கொண்ட ஆணையை விடவும் மேலானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.  

தமிழ் மக்கள் கொடுத்த ஆணையானது 75 வீதத்திற்கும் அதிமாகும். ஆகவே ஜனாதிபதி தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை மறந்துவிட்டு வழமையான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கவே நினைத்துள்ளார். ஆனால் எமது மக்கள் எமக்கு கொடுத்த ஆணையை ஒருபோதும் நாம் மீறமாட்டோம். இந்த ஆணைக்காக நாம் இழந்தவை அதிகம், இனப்படுகொலைக்கு பின்னரும் எமது மக்கள் உறுதியான ஆணையை எமக்கு வழங்கியுள்ளனர். எனவே அதனை கைவிட்டு எம்மால் எதனையும் செய்ய முடியாது.

அரசாங்கத்தினால் மாற்றமொன்றை ஏற்படுத்த முடியாது, ஆனால் எதிர்க்கட்சியினாலும் மாற்றமொன்றை உருவாக்க முடியாதுள்ளது. எதிர்கட்சியும் இனவாத கொள்கையில் மேலும் மேலும் ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் இறுக்கமான கொள்கையில் தான் பயணிக்கின்றது. 

ஆகவே இவ்வாறான நிலையில் எந்தவொரு கட்சிக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்கப்போவதில்லை. எதிர்க்கட்சி தலைவரும் தெளிவான கொள்கையினை தெரிவிக்காத வகையில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாது. எனவே அரச கட்டமைப்பில் மாற்றத்தை உருவாக்குவதே அவசியமான மாற்றமாக இருக்கும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டம் தாமதமாகும்...

2024-11-06 17:12:33
news-image

தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை வேறு ஒருவருக்கு...

2024-11-06 21:18:39
news-image

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருக்கிடையில்...

2024-11-06 20:14:55
news-image

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் மாற்றுக்கருத்துக்களை...

2024-11-06 16:21:54
news-image

அமெரிக்காவின் புதிய  ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்துத்...

2024-11-06 19:46:33
news-image

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கணிய மண்...

2024-11-06 19:30:48
news-image

ஊடக அடக்குமுறையை பிரயோகிப்பது எமது நோக்கமல்ல...

2024-11-06 16:27:48
news-image

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2024-11-06 17:50:04
news-image

தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

2024-11-06 17:24:58
news-image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியின் செயலாளருடன்...

2024-11-06 17:33:20
news-image

அரசியல் தீர்வைநோக்கிய பயணத்துடன் அபிவிருத்தியே எனது...

2024-11-06 17:25:41
news-image

பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டி, வைத்திய...

2024-11-06 17:04:21