(நா.தனுஜா)

எரிவாயு சிலிண்டர் நிறுவனங்களால் புதிதாகத் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் எரிவாயுவின் தரத்தை உறுதிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதுடன் ஏற்கனவே பதிவான எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு உள்ளது. 

அதனைச்செய்வதற்குத் தவறும் பட்சத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவதற்குத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு இன்றைய தினம் விஜயம்செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரகுமான், நளின் பண்டார உள்ளிட்டோர் இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தினர். 

அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தினர்.