40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பெண்களும் இரண்டு ஆண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (19) எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 649 என்ற விமானத்தின் மூலமாக டுபாய்க்கு நாணயத்தாள்களுடன் செல்ல முற்பட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக் குழுவினரிடம் இருந்து 22,300 அமெரிக்க டொலர்களும், 63,500 யூரோக்களும், 8,725 ஸ்ரேலிங் பவுண்களும், 292,00 சவுதி ரியால்களும் மற்றும் 75,000 திர்ஹாம்களும் இலங்கை சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.