(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான அரை மரதன் போட்டி பத்தரமுல்லை தியத்த உயனவுக்கு அருகில் எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவுகள் ஆகிய நாடுகளிலிருந்து இதுவரை 15 பேர் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இலங்கையிலிருந்து 250 பேர் வரையில் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
21 கிலோ மீற்றர் தூரமுடைய இந்த அரை மரதன் போட்டியானது பத்தரமுல்லை தியத்த உயனவில் ஆரம்பமாகி, எத்துல் கோட்டே, பிட்ட கோட்டே பாகொட வீதியினூடாக, நுகேகொடை ஹைலெவல் வீதி, மஹரகமை, பன்னிப்பிட்டிய பழைய வீதி, தலவத்துகொடை, பத்தரமுல்லை ஊடாக மீண்டும் தியத்த உயனவில் முடிவடையும்.
இப்போட்டியில் வெற்றியீட்டும் முதல் ஐவருக்கு 2 இலட்சம் முதல் 50 ஆயிரம் வரையிலான பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.
இந்த அரை மரதன் போட்டிக்கு மேலதிகமாக, பொது மக்கள் பங்கேற்பதற்கான ஆரோக்கியத்துக்கான ஓட்டப் போட்டியொன்றை நடத்துவதற்கு ஏற்பாட்டுக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
இந்த ஓட்டப் போட்டியானது 5 கிலோ மீற்றர் தூரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சகல போட்டிகளும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM