(எம்.எம்.சில்வெஸ்டர்)

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீக் இருபதுக்கு 20 போட்டித்  தொடர்  ஓமான் தலைநகர் மஸ்கட்டில் இன்றைய தினம் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

2022, ஜனவரி மாதம் 29 ஆம் திகதி வரை நடைபெறும் இப்போட்டித் தொடரில் ஏஷியா லயன்ஸ், வேர்ல்ட் ஜயண்ட்ஸ் , இந்திய மஹராஜாஸ் ஆகிய 3 அணிகள் விளையாடவுள்ளன.    

ஏஷியன் லயன்ஸ் அணியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான, சனத் ஜயசூரிய, முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், திலகரட்ண டில்ஷான், உப்புல் தரங்க,ரொமேஷ் களுவித்தாரன, நுவன் குலசேகர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இதில் சனத் ஜயசூரியவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதால், அவர் விளையாடுவது சந்தேகம்தான்.

இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் ஏனைய இரு அணிகளுடன் தலா 2 முறை மோதிக்கொள்வதுடன், புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜனவரி மாதம்  29 ஆம் திகதியன்று நடைபெறும்.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இப்போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளும் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏஷியா லெ‍ஜெண்ட்ஸ் அணி விபரம் :

சனத் ஜயசூரிய, முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், ரொமேஷ் களுவித்தாரன, திலகரட்ண டில்ஷான்,உப்புல் தரங்க,  நுவன் குலசேகர, சொய்ப் அக்தர்,  ஷஹீட்  அப்ரிடி, மிஸ்பா உல் ஹக், சொய்ப் மலிக்,  மொஹமட் யூசுப், கம்ரன் அக்மல், அசார் மஹ்மூட், மொஹமட் ஹபீஸ், உமர் குல், அஸ்கர் ஆப்கன்.

இந்தியா மஹராஜாஸ் அணி விபரம் :

விரேந்திர ஷேவாக், யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங், இர்பான் பத்தான், யூசுப் பத்தான், சுப்பிரமணியம் பத்ரிநாத், பிரக்யான் ஓஜா, நாமன் ஓஜா, மன்ப்ரீத் கோனி, ஹேமங் பதானி, வேனுகோபால் ராவ், முனாப் பட்டேல், சஞ்சய் பங்கார், நயன் மொங்கியா, அமித் பந்தாரி.

வேர்ல்ட் ஜயண்ட்ஸ் அணி விபரம் :

டெரன் சமி, டேனியல் வெட்டோரி,பிரெட் லீ, ஜொண்டி ரோட்ஸ், கெவின்  பீற்றர்சன், இம்ரான் தாஹீர், ஒவெய்ஸ் ஷா, ஹேர்ஷல் கிப்ஸ், அல்பி மோர்க்கல், மோர்னி மோர்க்கல், கொரி அண்டர்சன், மொண்டி பனேசார், பிரெட் ஹெடின், கெவின் ஓ பிரையன், பிரெண்டன் டெய்லர்.

        போட்டி அட்டவண‍ை

  • 20.01.2022 ஏஷியா லயன்ஸ் எதிர் இந்தியா மஹாராஜாஸ் 
  • 21.01.2022 ஏஷியா லயன்ஸ் எதிர் வேர்ல்ட் ஜயண்ட்ஸ்  
  • 22.01.2022 வேர்ல்ட் ஜயண்ட்ஸ் எதிர் இந்தியன் மஹாராஜாஸ் 
  • 24.01.2022 ஏஷியன் லயன்ஸ் எதிர் இந்தியன் மஹாராஜாஸ் 
  • 26.01.2022 வேர்ல்ட் ஜயண்ட்ஸ் எதிர் இந்தியன் மஹாராஜாஸ் 
  • 27.01.2022 ஏஷியன் லயன்ஸ் எதிர் வேர்ல்ட் ஜயண்ட்ஸ் 
  • 29.01.2022  இறுதிப் போட்டி