(எம்.எம்.சில்வெஸ்டர்)

லெஜென்ட்ஸ்  கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்கவிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சனத் ஜயசூரியவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரரான சனத் ஜயசூரிய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் லெஜென்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்கும் ஏஷியா லயன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்டை திருப்பி போட்ட பெருமை சனத் ஜயசூரியவை சாரும்.

குறிப்பாக 1995 களின் ஆரம்பத்தில் ரொமேஷ் களுவித்தாரனவுடன் ஜோடி  சேர்ந்து போட்டியின் முதல் 15 ஓவர்களில் அதிடியாக துடுப்பெடுத்தாடும் புதிய வழிமுறையை சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார் சனத் ஜயசூரிய.

இந்நிலையில் ஓமானில் இன்று ஆரம்பமாகவுள்ள லெஜென்ட்ஸ் கிரிக்கெட் லீக்கில் சனத் ஜயசூரிய பங்குகொள்வாரா என்பது கேள்வியாகவே உள்ளது.