டோக்கியோவில் நடைபெற்ற 2020 பராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வீடொன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

பராலிம்பிக் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் தினேஷ் பிரியந்தவுக்கு புதிய வீடு பரிசாக வழங்கப்படும் என்று பிரதமர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.
இந் நிலையிலேயே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கொழும்பு 02, கொம்பனி வீதி, மெட்ரோ ஹோம்ஸ் வீடமைப்புத் திட்டத்தின் 40 A 4/10 இல் உள்ள வீடு தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு பிரதமரினால் நேற்றைய தினம் வழங்கப்பட்டது.