முதல் ஆண்டில் தமது நிர்வாகம் மகத்தான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

எனினும் கொவிட்-19 நிலைமைகள் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய சவால்களை எதிர்கொள்ள தொடர்ந்தும் போராடி வருவதாகவும் அவர் கூறினார்.
ஓராண்டு ஜனாதிபதி பதவி கால பூர்த்திக்கு ஒருநாள் முன்னதாக புதன்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் உரையாற்றும்போதே பைடன் இந்த விடயங்களை தெளிவுபடுத்தினார்.
அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடுவது, வேலையின்மையை எதிர்த்துப் போராடுவது மற்றும் ஒரு பெரிய உள்கட்டமைப்பு மசோதாவில் கையெழுத்திட்டது உள்ளிட்ட அவரது நிர்வாகத்தின் சாதனைகளையும் அவர் இந்த உரையில் எடுத்துக்காட்டினார்.