பதுளையில் மோட்டார் சைக்கிள் விபத்து - இராணுவ சிப்பாய் கவலைக்கிடம்

Published By: Digital Desk 4

20 Jan, 2022 | 11:34 AM
image

பதுளை ஹாலி - எலைப் பகுதியின் உடுவரை என்ற இடத்தில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் படுங்காயங்களுக்குள்ளான நிலையில், அவர் பதுளை அரசினர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நபரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த இராணுவ சிப்பாய், கந்தளாயிலிருந்து, தியத்தலாவைக்கு கடமைக்கு சென்று கொண்டிருந்த வேளையில் உடுவரை என்ற இடத்தில், நாயொன்று குறுக்கே பாய்ந்ததினால், நிலைத்திடுமாறி குறித்த, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திய இராணுவ சிப்பாய், மோட்டார் சைக்கிளிலிருந்து, அருகேயுள்ள வயல்வெளிக்கு தூக்கி எறியப்பட்டதையடுத்து படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து குறித்த விபத்து தொடர்பில் பதுளைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நீர் வழங்கல்...

2026-02-13 09:51:32
news-image

போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூவர்...

2026-02-13 08:55:58
news-image

பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பிற்காக விசேட...

2026-02-13 09:47:49
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: விசேட மேல்...

2026-02-13 09:29:44
news-image

சிரேஷ்ட அரசியல்வாதி திஸ்ஸ விதாரண காலமானார்!

2026-02-13 09:15:32
news-image

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க...

2026-02-13 09:33:35
news-image

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு :...

2026-02-13 09:06:33
news-image

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள்...

2026-02-13 09:05:24
news-image

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க...

2026-02-13 09:25:17
news-image

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2026-02-13 08:42:59
news-image

விபத்தில் சிக்கி 17 வயது இளைஞன்...

2026-02-13 08:24:52
news-image

கிழக்கு, மத்திய, ஊவா உள்ளிட்ட பல...

2026-02-13 06:24:32