இந்தியாவின், கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 444 மாணவிகள் பல்கலைக்கழக மாணவர்களாலும், வெளியாட்களாலும் தங்களுக்கு தொல்லை ஏற்படுவதாகவும் பல முறை அரச அதிகாரிகளிடம் தெரிவித்தும் தங்களது கோரிக்கை மீது அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கையெழுத்திட்டு கேரள உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்து உள்ளனர்.

அந்த மனுவில் துன்புறுத்தல் செய்வது, ஆபாசமான முத்திரைகள் காட்டுவது, உடல் ரீதியான மிரட்டல், பொது இடங்களில் கேலி செய்வது என பல்வேறு முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.