இந்தியாவை 31 ஓட்டங்களினால் வீழ்த்திய தென்னாபிரிக்கா

By Vishnu

20 Jan, 2022 | 08:28 AM
image

போலண்ட் பார்க்கில் புதன்கிழமை நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா இந்திய அணியை 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.

Image

வெற்றி இலக்கான 297 ஓட்டங்களை துரத்திய இந்தியா, தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களின் அனல் பறக்கும் பந்துப் பரிமாற்றங்களினால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரினை தென்னாபிரிக்கா 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந் நிலையில் ஒருநாள் தொடரின் முதல் போட்டி புதன்கிழமை போலண்ட் பார்க்கில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 296 ஓட்டங்களை குவித்தது. 

அணித் தலைவர் டெம்பா பவுமா 110 ஓட்டங்களையும், ராசி வான் டெர் டுசன் 129 ஓட்டங்களையும் அதிகபடியாக விளாசினர். இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளும், அஷ்வின் 1 விக்கெட்டும்  வீழ்த்தினர். 

297 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா, முதலில் கவனமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தது. 

ஆரம்ப வீரர் கே.எல்.ராகுல் 12 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழந்தபோதும், ஷிகர் தவான்- விராட் கோலி இருவரும் பொறுப்புடன் ஆடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர்.

தவான் அரை சதம் கடந்து, தனது ஆட்டத்தை தொடர்ந்தார்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 138 ஆக இருந்த நிலையில் இந்த ஜோடியை மகராஜ் பிரித்தார். அவரது ஓவரில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் மொத்தம் 84 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்களை சேர்த்தார். 

மறுமுனையில் அரை சதம் கடந்த விராட் கோலி 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதன்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 152 ஆகும்.

அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். நெருக்கடியான கடைசி கட்டத்தில் கடுமையாக போராடிய ஷர்துல் தாக்கூர் பவுண்டரியாக விளாசினார். 

எனினும், இந்திய அணியால் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிறகு 265 ஓட்டங்களை மாத்திரம் எடுக்க முடிந்தது. 

ஷர்துல் தாக்கூர் 43 பந்துகளில், 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 50 ஓட்டங்களுடனும், பும்ரா 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியாக 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா 1:0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை போலண்ட் பார்க்கில் ஆரம்பமாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து புதிய...

2022-12-01 18:27:02
news-image

மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட்டில்  லபுஷேன், ஸ்மித்...

2022-12-01 17:31:02
news-image

கிரிக்கெட்டை விட பெண்களை சந்திப்பதிலேயே சாமிகவிற்கு...

2022-12-01 16:30:25
news-image

மெக்சிகோவின் 2ஆம் சுற்று வாய்ப்பு கைக்கு...

2022-12-01 11:34:07
news-image

11 வீரர்களை களமிறக்க இங்கிலாந்து தயார்,...

2022-12-01 09:44:27
news-image

சி குழுவில் முதலிடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும்...

2022-12-01 09:40:00
news-image

3 ஆவது ஒருநாள் போட்டியில் ஆப்கானை...

2022-11-30 23:33:27
news-image

நடப்புச் சம்பியன் பிரான்ஸை வென்றது டுனீசியா

2022-11-30 23:06:06
news-image

உலகக் கிண்ண 2 ஆவது சுற்றுக்கு...

2022-11-30 22:38:19
news-image

சி குழுவில் பிரான்ஸுக்கு அடுத்ததாக 2...

2022-11-30 18:39:04
news-image

இந்தியா, நியூ ஸிலாந்து 3 ஆவது...

2022-11-30 17:19:20
news-image

மற்றைய அணிகளை விட பலசாலி என்பதை...

2022-11-30 16:28:55