தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற சபாநாயகர் பார்க் பியோங்-செங் (Park Byeong-Seug) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

பார்க் பியோங்-செங் அடங்கலான 18 பேர் கொண்ட குழுவினர் நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இக் குழுவினரை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றார்.

Image

இந்த விஜயத்தின் போது, பார்க் பியோங்-செங் தலைமையிலான தென்கொரிய தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல முன்னணி அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளனர்.

இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இருதரப்பு உறவுகளை மேலும் புதுப்பிக்கும் மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் அமைந்துள்ளது.