(எம்.மனோசித்ரா)

நாட்டில் இன்று புதன்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 12  மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15 243 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று  மாலை வரை 829 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 598 536 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 568 637  பேர் குணமடைந்துள்ளனர். 14 656 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.