இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான முன்னாள் விம்பிள்டன் இரட்டையர் சாம்பியனான சானியா மிர்சா 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Sania Mirza of India plays a forehand during their semi final doubles match against Maria Bouzkova of Czech Republic and Tamara Zidansek of Slovakia during day seven of the 2020 Hobart International at Domain Tennis Centre on January 17, 2020 i

அவுஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு அவரது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

35 வயதான சானியா மிர்சா 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டென்னிஸ் வீராங்கனையாகத் தனது முதல் சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். 

இந்திய டென்னிஸ் வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள அவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்துள்ளார். 

இதுவரை 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், பெண்கள் இரட்டையர் பிரிவில் மூன்று மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார். 

2007 ஆம் ஆண்டு ஒற்றையர் தரவரிசையில் 27 ஆவது இடத்தில் இருந்தது அவரது அதிகபட்ச சாதனை ஆகும்.