(இராஜதுரை ஹஷான்)
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களை விடுவிக்க தேவையான டொலரை வழங்க மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாரட் கப்ரால் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
டொலர் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் அரிசி,சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டன மிகுதியாகவுள்ள கொள்கலன்கள் எதிர்வரும் மாதமளவில் விடுவிக்கப்படும்.
சந்தையில் அரிசி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினை கருத்திற் கொண்டு அரிசி இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேவையான அரிசி இறக்குமதி செய்யப்பட்டவுடன் சந்தையில் அரிசியின் விலை ஒப்பீட்டளவில் குறைவடையும்.
அரிசியின் விலை எக்காரணிகளுக்காகவும் அதிகரிக்கப்படமாட்டது.
ஒரு சில பகுதிகளில் அரிசியின் விலை 200 வரை விற்பனை செய்யப்படுபகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு சில வர்த்தகர்கள் முறையற்ற வகையில் செயற்படுவது வெறுக்கத்தக்கதாகும்.
எதிர்வரும் நாட்களில் ஒரு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM