பொது மக்களின்  குறைநிறைகளைக் கேட்டறியும்  வேலைத்திட்டம் உருவாக்கப்படும் - வடமாகாண ஆளுநர் 

19 Jan, 2022 | 05:17 PM
image

( எம்.நியூட்டன்)

வடக்கில் இனி அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களின்  குறை நிறைகளைக் கேட்டறியும்  வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா  தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண ஆளுநராக நான் கடமைகளை பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. 

எனக்கு ஒவ்வொரு நாளும் 20க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

சிலர் நேரிலும் வந்து என்னை சந்திக்கின்றார்கள். என்னை சந்திக்க வருபவர்கள் சிறுசிறு பிரச்சினைகளோடு வருகின்றார்கள்.

அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் சாதாரண மட்டப் பிரச்சினைகள் அதாவது கிராம சேவையாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள். 

ஆனால்  அவர்களால்  தீர்க்கப்படாதவிடத்து என்னிடம் வருகின்றார்கள்.

நான் என்னிடம் வருபவர்களை திருப்பி அனுப்ப முடியாது. அவர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்.

அரச உத்தியோகத்தர்கள் இனிமேல் அலுவலங்களில் மட்டும் கடமை புரியாது மக்களிடம் சென்று மக்கள் எதிர்நோக்கும்  பிரச்சனைகளை  தொடர்பில் ஆராய்ந்து எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வேலைத்திட்டத்தை  விரைவில் ஆரம்பிக்க உள்ளேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56