நாடளாவிய ரீதியில் இன்று 1 மணித்தியாலம் 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் (CEBEU) அறிவித்துள்ளது.

நான்கு பிரிவுகளின் கீழ் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று சங்கத்தின் பிரதிநிதிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டின் சில மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

ஆகவே மின்சாரத்தை சமநிலைப்படுத்தும் நோக்கில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.