பதுளை மற்றும் பசறை போன்ற பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் சுமார் ஒரு மணித்தியாலம் வரை வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தங்களுக்கான நியாயமான சம்பளவுயர்வை அரசாங்கம் பெற்றுத்தரவேண்டும், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில்  பதுளை மற்றும் பசறை போன்ற பகுதிகளை சேர்ந்த தோட்ட மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

தோட்டத் தொழிலாளர்கள், 1000 ரூபா சம்பள உயர்வு கோரி நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கான சம்பளவுயர்வு இதுவரையிலும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

எவ்வாறாயினும் தங்களது 1000  ரூபா சம்பளவுயர்வினை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும் என கோரி தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.