(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்குள் காணப்படும் தடைகள் குறித்து ஜனாதிபதி கடுமையான நடவடிக்கையினை முன்னெடுப்பார். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்துடன் சுமுகமாக செயற்பட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் அரசாங்கம் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துரைப்பது நாட்டு மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடாகவே கருத வேண்டும் என அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 மேலும் அவர் குறிப்பிடுகையில்,

நாட்டு மக்களுக்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்திற்குள் பல தடைகள் காணப்படுகின்றன.

எதிர்வரும் 3வருட காலத்தில் அரசாங்கத்தின் நிர்வாக கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்படும்.

அரசாங்கத்தின் கொள்கையுடன் இணங்க விருப்பமில்லாவிடின் சுதந்திர கட்சி அரசாங்கத்திலிருந்து தாராளமாக வெளியேறலாம் என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளோம்.

தங்களின் இயலாமையை மறைத்துக் கொள்வதற்கு அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தின் கொள்கையினை விமர்சிப்பவர்கள் குறித்து எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை சிறந்த முறையில் செயற்படுத்தவில்லை.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் பொதுஜன பெரமுன தெரிவு செய்யப்பட்ட கட்சிகளுடன் ஒன்றினைந்து  போட்டியிட எதிர்பார்த்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடுவது வரவேற்கத்தக்கது என்றார்.