உக்ரேன் நெருக்கடி குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
செவ்வாயன்று ஜேர்மன் தலைநகர் பேர்லினில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டோல்டன்பெர்க்,
மொஸ்கோ மற்றும் மேற்கு நாடுகளின் கவலைகளை நிவர்த்தி செய்ய நேட்டோ-ரஷ்யா கவுன்சிலில் ஒரு கூட்டத்தொடரினை நடத்த முன்மொழிந்திருப்பதாகவும், "உக்ரேனுக்கு எதிரான எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் தடுக்க முன்னோக்கி செல்லும் வழியைக் கண்டறிய முயற்சிப்பதாகவும்" கூறினார்.
இந்த பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பதற்கான உரிய திகதியை அவர் குறிப்பிடவில்லை. எனினும் எதிர்காலத்தில் விவாதங்களை நடத்த பரிந்துரைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ரஷ்யா உக்ரேனின் எல்லைகளுக்கு அருகில் 100,000 வீரர்கள் வரையிலான சமீபத்திய இராணுவக் கட்டமைப்பை நிறுத்தியுள்ளது.
இது உக்ரேன் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளிடையே வரவிருக்கும் படையெடுப்பு பற்றிய அச்சத்தைத் தூண்டியுள்ளது.
2014 இல் அண்டை நாடான உக்ரேனின் கிரிமியா தீபகற்பத்தை இணைத்துக் கொண்ட ரஷ்யா, நாட்டின் கிழக்கில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதப் போரைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது, ஆனால் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று மொஸ்கோ மறுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM