பிரதமரின் புதிய செயலாளராக நீர்ப்பாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து கலாநிதி பி.பி.ஜயசுந்தர அண்மையில் இராஜினாமா செயத நிலையிலேயே அந்த வெற்றிடத்துக்கு பிரதமரின் செயலாளராகவிருந்த காமினி செனரத் நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத் இன்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்றார்.

இந் நிலையில் வெற்றிடமான பிரதமரின் செயலாளர் பதவியை நிரப்பும் வகையிலேயே அனுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை நீர்ப்பாசன செயலாளர் பதவிக்கான நியமனக் கடிதத்தை கே.டபிள்யூ. ஐவன் டி சில்வாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையளித்துள்ளார்.