லோகன் பரமசாமி

கடந்த வார சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கைப் பயணம்  சர்வதேச அரசியலில் ஒரு முக்கிய விவகாரத்தை தோற்றுவித்துள்ளது.சீனா இந்து சமுத்திர பிராந்தியத் தீவுகளில் தனது கால்களை மேலும் வலுவாகப் பதித்து கொள்வதில்வெற்றி கண்டுள்ளதாக மேலை நாடுகள் கூறிவருகின்றன. 

அதேநேரம், சீனத் தரப்பிலிருந்து மேலை நாடுகளை நேரடியாக சுட்டாது, இலங்கையில்வேறெந்த நாடுகளும் தலையீடுகளைச் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதற்தரக் கடன் வழங்கும் மேலைத்தேய சார்பு நிறுவனங்களான உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெய்கா, உள்ளிட்டவை இம்முறைஇலங்கைக்கு உதவிகளை அள்ளி வழங்குவதற்கு முன்வரவில்லை.

இதனால் இலங்கைக்கு கடன்வழங்கும் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள சீனாநீண்டகால நட்பு நாடொன்றுக்கு உதவிகளை வழங்குகின்றபோது அதனை ‘சீனாவின் கடன் பொறி இராஜதந்திரம்’என்று விமர்சிக்க முயல்வது நகைப்புக்கு இடமானது என்று சீனா மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையானது தனது அரச கடன்களை மீளச் செலுத்த முடியாத அளவுக்கு வங்குரோத்துநிலையை அடைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டே சீனா மேலை நாடுகள் செய்யாத உதவிகளைஇலங்கைக்குச் செய்வதற்கு முன் வந்திருக்கிறது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-01-16#page-10

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/