வட,கிழக்கு இணைப்பிற்கு நாம் தயாராக இல்லை மு.கா.பிரதித்தலைவர் சட்டத்தரணி ஹாரிஸ் எம்.பி செவ்வி

By Digital Desk 2

19 Jan, 2022 | 02:56 PM
image

நேர்காணல் - ஆர்.யசி

 முஸ்லிம்களுக்கான தீர்வுத்திட்டத்தினை தமிழ்த் தலைவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தினால்ஆராயத்தயாராக இருக்கின்றோம். எனினும் தற்போதைய சூழலில் முஸ்லிம்களின் இருப்பினைக் கருத்திற்கொண்டு வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு நாம் தயாராக இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்பிரதித் தலைவர்களுள் ஒருவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினருமானசட்டத்தரணி எச்.எம்.எம் ஹாரிஸ் கேசரிக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார். 

அச்செவ்வியின்முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- 20ஆம் திருத்த சட்டத்திற்கும், வரவு, செலவு திட்டத்திற்கும்ஆதரவு வழங்கியதன் உண்மையான பின்னணி என்ன?

பதில்:- 20ஆம் திருத்தம் என்பது அரசியல் அமைப்பில் புதிய அத்தியாயம் அல்ல,1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் உள்ளடக்கப்பட்ட அதிகாரங்கள் பலமடைந்து அதன் ஒரு கட்டமாகஇப்போது 20ஆம் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

20ஆம் திருத்த சட்டம் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தாலும் கூடஎம்மை பொறுத்தவரையில் கொள்கை அடிப்படையிலேயே இதனை ஆதரித்தோம். ஆளைப்பார்த்து அரசியல்செய்வதை விடவும் கொள்கையின் அடிப்படையில் அரசியல் செய்வதே எமது நிலைப்பாடாகும். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் கொள்கையும்நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு ஆதரவாகவே அமைந்திருந்தது. நிறைவேற்று அதிகாரம் கொண்டஜனாதிபதி முறைமை நடைமுறையில் இருக்க வேண்டும் என்பது இப்போதும் எமது உறுதியான கொள்கையாகஉள்ளது. 

அஷ்ரப் இருந்த காலத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறையைமை ஒழிக்கவேண்டும்என்று எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. அதுமட்டுமல்ல நிறைவேற்று ஜனாதிபதிமுறைமை இருந்தால் மட்டுமே பெரும்பான்மை கட்சிகள் சிறுபான்மை மக்களை நாடுவார்கள் என்றசித்தார்ந்தமும் இருந்தது. 

அதன் அடிப்படையில் அவரது கொள்கையுடன் நின்று 20ஆம் திருத்த சட்டத்திற்குஆதரவு வழங்கினோம். அதுமட்டுமல்ல 19ஆம் திருத்த சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட காலகட்டத்தில்சுயாதீன குழுக்களின் வகிபாகம் அதிகமாக இருந்தன. ஆனால் இது சிறுபான்மை சமூகத்திற்குமுற்று முழுதாக பாதகமாகவே அமைந்தது.

அரசியல் அமைப்பு பேரவையினால் நியமிக்கப்படும் சுயாதீன குழுக்களின் தலைவர்கள்,பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்ததுடன் சிறுபான்மை மக்களை இவர்கள் கருத்தில்கொள்ளவே இல்லை. உதாரணமாக பொலிஸ் ஆணைக்குழுவை எடுத்துக்கொண்டால் பெரும்பான்மை இனத்தவர்ஒருவரை நியமித்ததன் மூலமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் நீதி, நியாயம் நிலைநாட்டப்படவில்லை.இவ்வாறு பல காரணிகளை கூறலாம். 

அரசியல்வாதிகளாகிய நாம் மக்களுக்கான ஏதேனும் நடவடிக்கை எடுக்கக்கூட முடியாதஅளவிற்கு சுயாதீன ஆணைக்குழுக்களின் தலையீடுகள் இருந்தன. ஆகவே இந்த காரணிகளை கருத்தில்கொண்டே நிறைவேற்று அதிகாரத்திற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்தோம். 

வரவு, செலவு திட்டத்தை எடுத்துக்கொண்டாலும் அது 20ஆம் திருத்தம் அளவிற்குமுக்கியம் இல்லையென்றாலும் கூட பஷில் ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த வேண்டியதற்காகஅதனை ஆதரிக்க தீர்மானித்தோம், வரவு, செலவு திட்டமானது ஒட்டுமொத்த மக்களின் நலன்களைகருத்தில் கொண்டது என்பது மறுக்க முடியாது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-01-16#page-12

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right