குடந்தையான்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று எட்டு மாதங்கள் கடந்த பிறகு,அவருடைய தலைமையிலான அரசு மீது மக்கள் அதிருப்தி கொள்ள தொடங்கியிருக்கின்றார்கள். 

குறிப்பாகதமிழக மக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விடயத்தில் தி.மு.க. அரசு தெளிவானதிட்டமிடலுடன் மக்களுக்கு உரிய வகையில் பொருட்களை வழங்கவில்லை என்பது அதிருப்திக்கானமுதற்காரணமாக உள்ளது.

அதேதருணத்தில் ஆளும் தி.மு.க. அரசு, மத்திய அரசை தீவிரமாக எதிர்க்க இயலாமலும்,தீவிரமாக ஆதரிக்க இயலாமலும் தவித்து வருகிறது. 

குறிப்பாக பா.ஜ.க.வைத் தவிர்த்து, தமிழகமக்களின் நலன்களை முன்னிறுத்தும் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும், தமிழகத்திற்குநீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய தீர்மானம், தமிழக ஆளுநர் மாளிகையில்தூசி படிந்து கிடக்கிறது.

தமிழகத்தின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசும், சட்டப்பேரவையும் இயற்றிய தீர்மானத்தை மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும்அனுப்ப வேண்டிய கடமையை மட்டும் செய்ய வேண்டிய ஆளுநர், அந்த கடமையை செய்வதற்கு தொடர்ந்துமறுத்து வருகிறார். 

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து, இது தொடர்பாக விரைந்துநடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், அவர் தொடர்ந்து மௌனம் காப்பதால் அரசியலில்அவரது பங்களிப்பு குறித்தும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை இடமாற்றம்செய்யவேண்டும் என்பது குறித்த கோரிக்கைகளும் மேலெழத் தொடங்கியிருக்கின்றன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-16#page-7

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/