தேசியன்

2500 வருடங்களுக்கு மேலான இந்தியாவின் பாரம்பரிய வரலாற்று உறவை விட 65 வருட சீனாவின் இராஜதந்திர நட்பில்வீழ்ந்து கிடக்கின்றது இலங்கை அரசாங்கம்.

இல்லாவிட்டால் "சீனா எங்களின் உயிர்த்தோழன்" என விளித்திருப்பாரா பிரதமர் மஹிந்த?  

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங்யி யின் இலங்கை விஜயத்துக்குப்பிறகு சீன –இலங்கை உறவில் ஏற்பட்டிருக்கும்மாற்றங்களை விட, முன்னதாக இந்த அரசாங்கத்தில் சீனாவுடன் உருவான உர வர்த்தகமுரண்பாடும் தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றது எனலாம்.

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட65 வருட பூர்த்தி மற்றும் இறப்பருக்குப் பதிலாக அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆண்டுகாலநிறைவு ஆகியவற்றை முன்னிட்டு கொழும்பு துறைமுக நகரில் கடந்த வாரம் இடம்பெற்றநிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய , பிரதமர் மஹிந்த,  சீனவெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோர் உட்பட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும்பங்கு கொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றியிருந்த பிரதமர் மஹிந்த, சீனா எமது உயிர்த்தோழன்,வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என்றுஅழுத்தி உரைத்திருந்தார். 

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் தலைவர்கள்அல்லது பிரதிநிதிகள் பங்கேற்பு நிகழ்வில், குறித்த நாடுகளுடனான வரலாற்று சம்பவங்கள்மற்றும்  இராஜதந்திரநட்பு, உதவிகள் போன்றவற்றை நினைவு கூர்ந்து அவர்களை உச்சி குளிர செய்வது ஒரு அரசியல்பண்பாடாகும். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-16#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/