பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞர்களின் நலன்களில் அக்கறை செலுத்துங்கள்  - ஐரோப்பிய ஒன்றியத்திடம் ரிஷாத் வலியுறுத்து

19 Jan, 2022 | 01:42 PM
image

(ஆர்.யசி)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுடைய நலனுக்கு தமது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பி ஆகியோருக்கிடையிலான சந்திப்பன் போது இதனை அவர் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், இலங்கைக்குமான நீண்டகால உறவு குறித்து நினைவுபடுத்தியதுடன், கடந்த காலங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவியதற்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மூலம் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுடைய விடுதலை தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் அதிக அக்கறை செலுத்துகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, சிறையிலிருக்கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் பலர், தமது கைதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்குக்கூட பொருளாதார வசதிகள் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர்.

பொருளாதார ரீதியில் அவர்களது குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. இதனால், அவர்களுக்கான நியாயம் கிடைப்பது கூட அரிதாகவுள்ளது.

எனவே, கடந்த காலங்களைப் போன்று ஐரோப்பிய ஒன்றியம், பாதிக்கப்பட்டுள்ள கைதிகளின் நலனுக்கு தமது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என அவர் வேண்டிக்கொண்டார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட இன்னும் பல அறிஞர்கள், மாணவர்கள் என பலரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பதையும் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

இதன்போது,  கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பி,ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்பில், நீதியமைச்சின் ஊடாக, நீதிமன்றங்களின் திறனை அதிகரிக்கும் மூன்று வருட செயற்றிட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், ரிஷாட் பதியுதீன் எம்.பியின் கைது தொடர்பிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பி கேட்டறிந்துகொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08