(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நெருக்கடியான சூழ்நிலையினை அடிப்படையாகக் கொண்டே நாட்டு மக்கள் எதிர்வரும் காலங்களில் அரசியல் தீர்மானங்களை முன்னெடுப்பார்கள் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அத்தியாவசிய பொருட்கள் மீதான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து வர்த்தகர்கள் தங்களின் விருப்பத்திற்கமைய பொருட்களின் விலையினை நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வேறுப்பட்டதாக காணப்படுகிறது.

நாட்டு மக்கள் எதிக்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நெருக்கடியான சூழ்நிலையினை அடிப்படையாகக் கொண்டே நாட்டு மக்கள் அரசியல் ரீதியிலான தீர்மானங்களை முன்னெடுப்பார்கள்.

இளம் தலைமுறையினர் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் நடப்பு அரசியல் நிலைமையினை விமர்சிக்கும் தன்மை காணப்படுகிறது.

பல்வேறு காரணிகளை கருத்திற் கொண்டு மக்கள் அரசியலை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கும், பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் காணப்படும் கருத்து வேறுப்பாடுகளுக்கு தீர்வு காணாவிடின் அது இடம்பெறவுள்ள தேர்தல்களில் தாக்கம் செலுத்தும் என்றார்.