யக்கல மகா வித்தியாலயத்தின் சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் இறுதி வருட பாடசாலை மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியை இலங்கை அச்சக உரிமையாளர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் 178 பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர்.

அச்சுத் தொழில் குறித்து எந்தவித அறிவும் இல்லாத மாணவர்களுக்கு பெரும் பயனுள்ள நிகழ்ச்சியாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்  ஜானக ரத்னகுமார, மலிந்த தென்னகோன் ( ஜே.டி.சி  தனியார் தொழில்நுட்பம்),  அமில வன்னியாராச்சி மற்றும் இலங்கை அச்சக நிறுவனத்தைச் சேர்ந்த சரத் வஞ்சவலகே ஆகியோரினால் அச்சிடலின் பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் இத் திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததோடு, மாணவர்கள்  எதிர்காலத்தில் தங்கள் வாழ்க்கைப் பாதையைத் திட்டமிடுவதற்கு வழிகாட்டுதலாகவும் இது அமைந்தது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு சித்தாரா தனியார் நிறுவனம் மற்றும் அட்லஸ் அக்சிலியா தனியார் நிறுவனம் ஆகியன அனுசரணை வழங்கின.

இலங்கையில் உள்ள பல்வேறு மாகாணங்களில் இது போன்ற பல நிகழ்ச்சிகளை எதிர்வரும் காலங்களில் நடத்த இலங்கை அச்சக சங்கம் உத்தேசித்துள்ளது.

மேலும் யக்கல மகா வித்தியாலய அதிபருக்கு இலங்கை அச்சக உரிமையாளர் சங்கம் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.