பிச்சை வேண்டாம் நாயைப் பிடி

By Digital Desk 2

19 Jan, 2022 | 02:26 PM
image

கார்வண்ணன்

“தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வைத்துக்கொண்டு உரியவாறு செயற்படவும் முடியாமல், மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்முடியாமல் அமைச்சர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்” 

பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசாங்கத்துக்குள் காணப்படும்முரண்பாடுகள், முற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கத்தில் உள்ள பலர்வெறுப்படைந்து போயிருக்கிறார்கள்.

ஒரு அரசாங்கம் வீழ்ச்சி காணும் போது, அல்லது தோல்வியைச் சந்திக்கின்றபோது, அதில் இணைந்திருப்பவர்கள், உயிழந்த நாயில் இருந்து உண்ணி கழன்று போவது போலபோய் விடுவார்கள்.

உலக அரசியலின் இந்தப் பொது வழக்கம், இலங்கைக்கும் விதிவிலக்கானதுஅல்ல.

2004இல், சந்திரிகாவின் அதிகாரம் குறையத் தொடங்கியதும், அவரிடம்இருந்து விலகி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஓடினார்கள். 

2014இல் அவரைத் தோற்கடிக்கவும், அவர் தோல்வி கண்ட பின்னரும்,மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் ஓடினார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவின் கை ஓங்கத் தொடங்கியதும், மீண்டும் அவரைச் சூழத் தொடங்கினார்கள்.

இவ்வாறான நிலை ஒன்று இப்போது உருவாக ஆரம்பித்திருக்கிறது.

தற்போதைய அரசாங்கம் வீழ்ச்சி காணவுமில்லை, இலகுவில் வீழ்ச்சிகாணப்போவதும் இல்லை.

எனினும், அரசாங்கத்தில் இணைந்திருப்பவர்கள் பலர், எப்போது வெளியேபோகலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-16#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right