ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையினைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டின் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூட்டம், பிரதமர்  மஹிந்த ராஜபக்க்ஷ  தலைமையிலான பாராளுமன்ற குழு அறை 01 இல் இடம்பெற்றது.

May be an image of 7 people, people sitting, people standing and indoor

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம் தொடர்பிலான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தினை ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்கள் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம் பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலர் விவாதத்தின் போது கருத்து தெரிவிக்க தயாராக இருப்பதால், 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமையையும் விவாதத்திற்காக ஒதுக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதன்போது பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

அதற்கமைய, சபாநாயகருக்கு எடுத்துரைத்து, 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமையையும் விவாதத்திற்காக ஒதுக்கிக் கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

'எண்ணெய் தாங்கிகள் மீண்டும் நாட்டிற்கு' எனும் தொனிப்பொருளில் - திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான ஒப்பந்தம் குறித்து வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்றைய கூட்டத்தில் தெளிவுபடுத்தினார்.

மேற்படி கூட்டத்தில் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பசில் ராஜபக்க்ஷ, ஜீ. எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவங்ச, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எனது நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் ஷானிகா கொபல்லவ, பிரதமரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பிரியந்த ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.