பொதுநலவாய விளையாட்டு விழா : இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஸ்கொட்லாந்தை வெற்றிகொண்டது

18 Jan, 2022 | 07:32 PM
image

(என்.வீ.ஏ.)

கோலாலம்பூரில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான பொதுநலவாய விளையாட்டு விழா மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தகுதிகாண் சுற்றில் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஸ்கொட்லாந்தை 109 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

அணித் தலைவி சமரி அத்தபத்து குவித்த அதிரடி அரைச்சதம் இலங்கைக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.

கின்ராரா அக்கடமி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை  20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 182 ஓட்டங்களைக் குவித்தது.

சமரி அத்தப்பத்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 45 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 86 ஓடடங்களைக் குவித்தார்.

மொத்த எண்ணிக்கை 34 ஓட்டங்களாக இருந்தபோது இளம் வீராங்கனை விஷ்மி குணரட்ன (16 வயது) 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் சமரி அத்தப்பத்துவும் 17 ஓட்டங்களைப் பெற்ற ஹசினி பெரேராவும் 2ஆவது விக்கெட்டில் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியைப் பலப்படுத்தினர்.

மொத்த எண்ணிக்கை 124 ஓட்டங்களாக இருந்தபோது இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து ஹர்ஷிதா மாதவி (23), நிலக்ஷிகா சில்வா (23 ஆ.இ.), அமா காஞ்சனா (11 ஆ.இ.) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை துடுப்பாட்டத்தில் வழங்கினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 12.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஆரம்ப வீராங்கனை எலென் வொட்சன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது காயம் காரணமாக ஓய்வு பெற நேரிட்டது. மற்றைய ஆரம்ப வீராங்கனை சாரா ப்ரைஸ் 11 ஓட்டங்களைப் பெற்றார்.

இவர்களை விட வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெறவில்லை.

உபாதை காரணமாக லோர்னா ஜெக் துடுப்பெடுத்தாடவில்லை.

இலங்கை பந்துவீச்சில் சச்சினி நிசன்சலா 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமா காஞ்சனா 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் உதேஷிக்கா ப்ரபோதனி 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகியாக சமரி அத்தப்பத்து தெரிவானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மும்பையை 7 விக்கெட்களால் வெற்றிகொண்ட கொல்கத்தாவுக்கு...

2026-05-21 09:50:14
news-image

பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் முழுமையான...

2026-05-20 19:00:39
news-image

சூரியவன்ஷியின் அசுர வேக துடுப்பாட்ட உதவியுடன்...

2026-05-20 04:56:02
news-image

பாக். வீரர்கள் மசூத், அகா, ரிஸ்வான்...

2026-05-19 23:10:45
news-image

மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்டத்தில் பங்கேற்கும்...

2026-05-19 18:17:47
news-image

இலங்கை மகளிர் 'ஏ' ரி20 குழாத்தில்...

2026-05-19 15:14:35
news-image

LPL 6ஆவது அத்தியாயத்தில் ஜெவ்னா கிங்ஸின்...

2026-05-19 13:27:27
news-image

ப்ளே ஓவ் தகுதியை சன்ரைசர்ஸ், குஜராத்...

2026-05-19 10:03:45
news-image

பங்களாதேஷின் முஷ்பிக்குர், லிட்டன் தாஸ் துடுப்பாட்டத்தில்...

2026-05-19 03:17:48
news-image

இலங்கை - நியூஸிலாந்து மகளிர் ஏ...

2026-05-19 03:11:43
news-image

எல்பிஎல் 6ஆவது அத்தியாயம் எஸ்எஸ்சியில் ஆரம்பம்;...

2026-05-19 02:39:44
news-image

கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனையை புதுப்பித்தார்...

2026-05-18 17:23:02