இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே 302 ஓட்டங்களை குவித்துள்ளது.

Image

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியுடன் விளையாடி வருகிறது.

கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று முன்னிலை பெற்றது.

இந் நிலையில் தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணித் தலைவர் கிரேக் எர்வின் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இன்றைய போட்டியில் இலங்கை அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கிய நிலையில், சிம்பாப்வே அணியில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை.

முதல் போட்டியில் காயமடைந்த சமிக குணசேகரவுக்கு பதிலாக துஷ்மந்த சமீர இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக துஷ்மந்த சமீர முதல் போட்டியில் விளையாடவில்லை, அவருக்கு பதிலாக சாமிக்க குணசேகர சேர்க்கப்பட்டிருந்தார்.

இதேவேளை இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் உப தலைவர் பதவி தற்காலிகமாக சரித் அசலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

முதல் போட்டியில் அசலங்கா 71 ஓட்டங்களை எடுத்து இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தார். 

இது இவ்வாறிருக்க போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் அதிகபடியாக அணித் தலைவர் கிரேக் எர்வின் 91 ஓட்டங்களையும், சிக்கந்தர் ராஸா 56 ஓட்டங்களையும், சேன் வில்லியம்ஸ் 48 ஓட்டங்களையும் மற்றும் ரெஜிஸ் சகப்வா 47 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ஜெஃப்ரி வாண்டர்சே 3 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன மற்றும் சமிக கருணாரத்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் இலங்கை அணியின் வெற்றிக்கு 303 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.