பரிதாபத்தின் பொறுப்பாளிகள்

Published By: Digital Desk 2

18 Jan, 2022 | 10:02 PM
image

ஆர்.ராம்

2018,2019 ஆட்சிமாற்றத்திற்கான பூர்வாங்க நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருந்த காலமது. அப்போதைய ஆளும் அணியின் வேட்பாளராக தவிர்க்க முடியாத நிலையில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரான சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 

இவர் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்காக கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் வெவ்வேறு உபாயங்களை கையிலெடுத்திருந்தார். அதிலொன்று தான் நாடாளவிய ரீதியில் 'மாதிரிக் கிராம வீட்டுத்திட்டம்' என்ற செயற்றிட்டமாகும். 

இந்த திட்டத்தின் கீழ், மேற்படி காலப்பகுதியில் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் வீடுகளை அமைப்பதற்கு தலா ஏழரை இலட்சம் ரூபா வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டு தடாலடியாக பயனாளிகள் தெரிவும் இடம்பெற்றது.  அதுமட்டுமன்றி, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஐம்பதாயிரம், எழுபத்தையாயிரம், ஒரு இலட்சம் என்று முதற்கட்ட நிதியும் கையளிக்கப்பட்டது. இது, வீட்டுக்கனவுடன் இருந்தவர்களுக்கு அகமகிழ்வை ஏற்படுத்தியது. 

குறிப்பாக, போரின் கோரத்தால் ஒதுங்குவதற்கு கூட தாழ்வாரமே இல்லாதிருந்த தமிழ் மக்களில் இந்த வீட்டுத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டவர்களுக்கு அதியுச்ச ஆனந்தத்தினை ஏற்படுத்தியது. இதனால், அவர்கள் முதற்கட்ட நிதியைப் பெற்றுக்கொண்டு தமது வீடுகளுக்கான அத்திவாரங்கள் இட்டனர்.

சிலர், அத்தோடு நின்றுவிடாது தாம் வாழும் பிரதேசத்தில் அறிந்த, தெரிந்தவர்களிடம் தற்காலிக நிதி உதவிகளைப் பெற்று பகுதியளவில் தமது வீடுகளின் கட்டுமானத்தை முன்னெடுத்தனர். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-01-16#page-10

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்