ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று காலை 10.00 மணிக்கு 9 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Image

அதன் பின்னர் அரசியலமைப்பின் 33(2) யாப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை  பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு நாட்டுப் பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்திற் கொண்டவை.

தனது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்கப் போவதில்லை, தற்போதைய அரசாங்கம் உரிமை மீறல்களுக்கு ஆதரவளிக்கவில்லை எனவும் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் பின்னர் நாளை பிற்பல் 1.00 மணிவரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.