இலங்கைப் புலமைசார் தொழில்வாண்மையாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு மற்றும் விருது வழங்கல் விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

'நல்லாட்சி - எதிர்காலப் பயணம்' எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுவதுடன், கலந்துரையாடப்படும் விடயங்கள் உள்ளடங்கிய அறிக்கை இலங்கையிலுள்ள தொடர்புடைய நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.  

சட்டம் மற்றும் வெளிப்படைத்தன்மை, நிலையான பொருளாதார வளர்ச்சி, வினைத்திறன் மற்றும் செயலாற்றுகை, பொறுப்புக்கூறல் ஆகிய தலைப்புக்களில் இந்த மாநாடு 04 அமர்வுகளாக நடைபெறுகிறது.

1975 ஆண்டில் நிறுவப்பட்ட புலமைசார் தொழில்வாண்மையாளர்கள் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழில்வாண்மை நிறுவனமாகும். ஆரம்ப காலத்தில் 11 நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்த சங்கத்தில் தற்போது 47 நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. இந்த 47 தொழில்வாண்மை நிறுவனங்களும் 33 தொழில்வாண்மைகளை கொண்டுள்ளன. 

தொழில்வாண்மையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் திறமைகளைப் பாராட்டி ஜனாதிபதியால் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

சபாநாயகர் கரு ஜயசூரிய, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, புலமைசார் தொழில்வாண்மையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரோகண குருப்பு, ருவன் கால்லகே, நிஸ்ஸங்க பெரேரா, டுலிப் பெரேரா ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்குபற்றினார்கள்.