இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

By Vishnu

18 Jan, 2022 | 09:57 AM
image

இலங்கை மின்சார சபைக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில் நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல தரப்பினர் பங்கெடுக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே தற்சமயம் கையிருப்பில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் களனி திஸ்ஸமின் நிலையத்திற்கு தேவையான 3000 ஆயிரம் மெற்றிக் தொன் உராய்வு எண்ணெயை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்கியதை தொடர்ந்து எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனிடையே இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளனர்.

இலங்கை மின்சார சபைக்கு புதிய பொது முகாமையாளரை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டவுள்ளது.

மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தினர் இன்று காலை 10 மணிக்கு இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33