9 ஆவது பாராளுமன்றின் 2 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

Published By: Vishnu

18 Jan, 2022 | 07:36 AM
image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (2022.01.18) காலை 10.00 மணிக்கு 9 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

May be an image of 2 people, people standing and outdoors

அரசியலமைப்பின் 33(2) யாப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை அரசின் கொள்கைப்பிரகடனத்தையும் பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். 

அதற்கு முன்னர் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியின் தலைமையில் வைபவரீதியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய ஆலோசனைக்கு அமைய மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன்படி மரியாதை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுத்தல் மற்றும் வாகன அணிவகுப்பு என்பன இடம்பெறாது.   

அதற்கமைய, ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக பாராளுமன்ற வளாகத்தில் பொலிஸ் கலாசார பிரிவின் பங்களிப்புடன் கலாசார மரியாதை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

காலை 09.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெறவுள்ளதுடன், முதலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைதரவுள்ளனர். 

அதன் பின்னர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வருகையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வருகையும், அதனை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகையும் இடம்பெறும். 

சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் பாராளுமன்ற நுழைவாயிலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வரவேற்பார்கள்.   

படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர் மற்றும் உதவிப் படைக்கலசேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவார். 

இதன்போது பாராளுமன்றத்தின் பிரதான வாயிலின் அருகில் ஸ்ரீ ஜயவர்தனபுர, ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவிகள் ஜயமங்கள கீதம் இசைத்து ஜனாதிபதியை ஆசிர்வதிக்கவுள்ளனர்.

ஜனாதிபதியினால் அரசின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கப்பட்டதை அடுத்து சபை ஒத்திவைக்கப்படும். அதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய விருந்தினருக்கும் தேநீர் விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு  வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அனைத்துவிதமான சுகாதார முறைகளையும் பின்பற்றி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிப்பது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்றது. 

இதில் பொலிஸ் கலாசார பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர, ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 11 people, people standing, monument and outdoors

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44