கொவிட்-19 தொற்று தொடர்பாக நாட்டில் நேற்றைய தினம் மேலும் 07 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

05 ஆண்களும், 02 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்தனர்.

இதனால் இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,218 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 163 நபர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதனால் பூரண குணமடைந்த கொவிட் தொற்றளர்களது எண்ணிக்கையும் 568,373 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 12,763 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.