ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் உள்ள முக்கிய எண்ணெய் ஆலையை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய சந்தேகத்திற்குரிய ஆளில்லா விமான தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

2 Indians, 1 Pakistani killed in blast from 'drone attack' in Abu Dhabi |  World News - Hindustan Times

சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் இந்தியப் பிரஜைகள் என்றும் ஒருவர் பாகிஸ்தானியர் என்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

எனினும் காயமடைந்தவர்களில் அடையாளம் உறுதிபடுத்தப்படவில்லை.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் திங்கட்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று எரிபொருள் டேங்கர்கள் வெடித்து சிதறின.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான தளத்திலும் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.