மத்திய அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு 12 மணி நேரத்தில் 2,805,100 ரூபா வருமானம்

Published By: Vishnu

17 Jan, 2022 | 03:11 PM
image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அனுசரணையின் கீழ் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. 

பாதை திறக்கப்பட்ட முதல் 12 மணிநேரத்தில் (16-01-2022) (நண்பகல் 12.00 மணியிலிருந்து நள்ளிரவு 12.00 மணிவரை ) 2,805,100.00 ரூபா வருமானம் கிடைத்ததாக ஆளும் தரப்பு  பிரதம கொறடா  நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மீரிகம முதல் குருநாகல் வரையிலான அதிவேக நெடுஞ்சாலையில் முதல் 12 மணித்தியாலங்களில் 13,583 வாகனங்கள் பயணித்துள்ளதுடன் விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.

சனிக்கிழமை (15-01-2022) நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை மீரிகமவிலிருந்து குருணாகல் வரை கெட்டுவான நுழைவாயில் வரையிலும், கெட்டுவானவிலிருந்து மீரிகம வரையிலும் பொதுமக்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21