Published by T. Saranya on 2022-01-17 14:32:46
அமெரிக்காவில் சிறுவர்கள் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் தரவு தெரிவித்துள்ளது.
இது தொற்று ஆரம்பத்ததிலிருந்து மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன.
ஒவ்வொருநாளும் 17 வயதுக்குட்பட்ட 893 சிறுவர்கள் புதிதாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து உயர்வடைந்து காணப்படுகிறதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் தெரிவித்துள்ளது.
இந்ந வைத்தியசாலைகளில் பெரும்பாலனாவர்களுக்கு கொரோனா தொற்றுள்ளது.
இருப்பினும் சிலர் பிற காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் இருந்தாலும், அவர்கள் அனுமதிக்கப்பட்ட போது அல்லது வைத்தியசாலைகளில் தங்கியிருந்தபோது கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 1, 2020 முதல் ஜனவரி 13, 2022 வரை 17 வயது மற்றும் அதற்குக் குறைந்த வயதிலான குழந்தைகள் 90,000 க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
புதிதாகப் பிறந்த குழந்தை முதல் 4 வயது வரையிலான குழந்தைகள், தடுப்பூசி போடுவதற்கு இன்னும் தகுதி பெறாதவர்களிலேயே அதிக வைத்தியசாலைகளில் சேர்க்கும் விகிதம் உள்ளது.