(என்.வீ.ஏ.)
பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிர் இருபது - 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள 8 ஆவது அணியைத் தீர்மானிக்கும் ஐ.சி.சி. பொதுநலவாய தகுதிகாண் சுற்று கோலாலம்பூரில் செவ்வாய்க்கிழமை (18) ஆரம்பமாகவுள்ளது.
இந்த தகுதிகாண் சுற்றில் இலங்கை, பங்களாதேஷ், கென்யா, மலேசியா, ஸ்கொட்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் மகளிர் அணிகள் பங்குபற்றுகின்றன.

ஐ.சி.சி. தரவரிசைப்படி முதல் 7 இடங்களுக்குள் இருந்த அவுஸ்திரேலியா, பார்படோஸ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே நேரடி தகுதிபெற்ற நிலையில் அவற்றுடன் 8ஆவது நாடாக இணையப்போகும் அணியை கோலாலம்பூர் தகுதிகாண் சுற்று தீர்மானிக்கும்.
இந்த தகுதிகாண் சுற்றில் பங்குபற்றும் 5 நாடுகளும் ஒன்றையொன்று லீக் சுற்றில் எதிர்த்தாடும்.
லீக் சுற்று முடிவில் முதலிடம் பெறும் நாடு பொதுநலவாய விளையாட்டு விழாவில் 8 ஆவது நாடாக பங்குபற்ற தகுதி பெறும்.
'மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை விட இந்த வருடம் நடைபெறவுள்ள பிரதான கிரிக்கெட் போட்டி பொதுநலவாய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டியாகும்.
உலகக் கிண்ண போட்டியில் பங்குபற்ற முடியாமல் போனதை பொதுநல விளையாட்டு விழாவில் பங்குபற்ற கிடைப்பதன் மூலம் நிவர்த்தி செய்வதாக கருத முடியாது. ஆனால், அதனால் எமக்கு சிறு ஆறுதல் கிடைக்கும்' என இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து தெரிவித்தார்.
'இந்த சுற்றுப் போட்டியில் (தகுதிகாண்) வெற்றிபெற்று பேர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற எங்களுக்க நல்ல வாய்ப்பு இருக்கின்றது.
எமது அணியில் அனுபவசாலிகள் இடம்பெறும் அதேவேளை திறமைவாய்ந்த இளம் வீராங்கனைகளும் இருக்கின்றனர்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த தகுதிகாண் சுற்றில் இலங்கை தனது முதலாவது போட்டியில் ஸ்கொட்லாந்தை செவ்வாய்க்கிழமை (18) எதிர்த்தாடும்.
கென்யாவை 20 ஆம் திகதியும் மலேசியாவை 22 ஆம் திகதியும் பங்களாதேஷை 24 ஆம் திகதியும் இலங்கை சந்திக்கவுள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம்
சமரி அத்தபத்து (தலைவி), ஹர்ஷிதா மாதவி (உதவித் தலைவர்), ஹசினி பெரேரா, நிலக்ஷிகா சில்வா, அனுஷா சஞ்சீவனி, கவிஷா டில்ஹாரி, அமா காஞ்சனா, சச்சினி நிசன்சலா, உதேஷிக்கா ப்ரபோதனி, இனோக்கா ரணவீர, விஷ்மி ராஜபக்ஷ, ஓஷாதி ரணசிங்க, சுகந்திக்கா குமாரி, தாரிக்கா செவ்வந்தி, ப்ரசாதினி வீரக்கொடி, அச்சினி குலசூரிய.
பதில் வீராங்கனைகள் : மதுஷிக்கா மெத்தானந்த, காவியா காவிந்தி, இமேஷா துலானி. சத்யா சந்தீப்பனி.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM