பாராளுமன்றம் நாளை ஜனாதிபதியினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும்

By T. Saranya

17 Jan, 2022 | 09:19 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை 10.00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க உள்ளார். 

பாராளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை அனுமதித்துக்கொண்ட பின்னர் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிவரை சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டது. என்றாலும் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி காேட்டாய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஜனவரி 18ஆம் திகதிவரை ஒத்திவைத்திருந்தார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டால் அது மீண்டும் ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்படவேண்டியது பாராளுமன்ற சம்பிரதாயமாகும். 

அரசியலமைப்பின் 33(2) யாப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அரசின் கொள்கைப்பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பார்.

அத்துடன் நாளைய தினம் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைப்பதற்காக  ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய ஆலோசனைக்கு அமைய மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி மரியாதை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுத்தல் மற்றும் வாகன அணிவகுப்பு என்பன இடம்பெறாது.  என்றாலும் ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக பாராளுமன்ற வளாகத்தில் பொலிஸ் கலாசார பிரிவின் பங்களிப்புடன் கலாசார மரியாதை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அதன் பிரகாரம்  நாளைய தினம் ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்துக்கு வருவதற்கு முன்னர் காலை 09.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெறவுள்ளது. 

ஆரம்பமாக  பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரவுள்ளார். அதன் பின்னர்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வருகையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்  வருகையும் அதனை அடுத்து  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வின் வருகையும் இடம்பெறும். 

சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் பாராளுமன்ற நுழைவாயிலில்  ஜனாதிபதியை வரவேற்பார்கள்.  

இதன்போது பாராளுமன்றத்தின் பிரதான வாயிலின் அருகில் ஸ்ரீ ஜயவர்தனபுர, ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவிகள் ஜயமங்கள கீதம் இசைத்து  ஜனாதிபதியை  ஆசிர்வதிக்கவுள்ளனர். அதனை அடுத்து படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர் மற்றும் உதவிப் படைக்கலசேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி  சபை நடுவால் சபாநாயகர் ஆசனத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

அதனையடுத்து ஜனாதிபதியினால் அரசின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கபடும். கொள்கை பிரகடனம் நிறைவடைந்த பின்னர், பாராளுமன்றம் மறுநாள் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படும்.

இதேவேளை, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு  வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41
news-image

பொருளாதார நெருக்கடி மனித உரிமை விவகாரங்களில்...

2022-10-05 12:24:53
news-image

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்...

2022-10-05 15:40:52