நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முதலாக பெரும் தவிப்பில் இருக்கிறார். அதுவும் இளைய தளபதி விஜயும், தனுசும் வெற்றிப் பெறாத இடத்திற்கு இவர் போட்டியிடுவதால் சிவகார்த்திகேயன் தவிப்பில் இருக்கிறார். 

விடயம் என்னன்னா, சிவா நடிப்பில் உருவான ரெமோ முதன்முறையாக தெலுங்கில் வெளியாகிறது. அதுவும் இங்கு வெளியாகும் அதே திகதியில் தெலுங்கிலும் வெளியாகிறது. அன்றைய திகதியில் பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கும் வெளியாகிறது. தமிழில் போலவே தெலுங்கிலும் ரெமோ வெற்றிப் பெறவேண்டும். அப்படி வெற்றிப்பெற்றால் தான் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சீயான் விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் போல் தெலுங்கு மார்க்கெட்டையும் பிடிக்க முடியும். அப்போது தான் அடுத்த படத்தின் சம்பளத்தையும் கூடுதலாக கேட்கமுடியும். இப்படி பல கணக்குகள் இருப்பதால் படம் தெலுங்கிலும் ஓடவேண்டும் என்று கூடுதலாக பிரார்த்திக்கிறாராம் சிவகார்த்திகேயன். தெலுங்கில் இப்படத்தை முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் வெளியிடுகிறாராம்.

தகவல் : சென்னை அலுவலகம்