4-0 என்ற கணக்கில் இங்கிலாந்‍தை தோற்கடித்து ஆஷஸ் கிண்ணத்தை கைப்பற்றிய ஆஸி.

By Vishnu

16 Jan, 2022 | 06:56 PM
image

ஹோபார்ட்டில் நடந்த ஐந்தாவது இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 146 ஓட்டங்களினால் இங்கிலாந்தை தோற்கடித்த அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Image

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 

4 போட்டிகள் முடிவில் அவுஸ்திரேலியா 3-0 என தொடரைக் கைப்பற்றி இருந்தது. இதில் ஒரு போட்டி சமனிலையில் முடிந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆவதும் இறுதியுமான டெஸ்ட போட்டி ஹோபர்ட்டில் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 303 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் பிராட், மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரோபின்சன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 188 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

அணி சார்பில் அதிகபடியாக கிறிஸ் வோக்ஸ் 36 ஓட்டங்களையும், ஜோ ரூட் 34 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் ஒரு விக்கெட்டினையும் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனால் 123 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 37 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், பிராட் 3 விக்கெட்டுகளையும் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 271 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பேர்ன்ஸ், ஜாக் கிராலி ஆகியோர் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 68 ஓட்டங்களை சேர்த்தது. 

பின்னர் ரோரி பேர்ன்ஸ் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கிராலி 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

இதன்போது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 82 ஓட்டங்களை எடுத்திருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் நீண்ட நேரம் தாக்கு பிடிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 124 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Image

இதனால் அவுஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது.

ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து புதிய...

2022-12-01 18:27:02
news-image

மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட்டில்  லபுஷேன், ஸ்மித்...

2022-12-01 17:31:02
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் சி குழுவில்...

2022-12-01 18:58:36
news-image

கிரிக்கெட்டை விட பெண்களை சந்திப்பதிலேயே சாமிகவிற்கு...

2022-12-01 16:30:25
news-image

மெக்சிகோவின் 2ஆம் சுற்று வாய்ப்பு கைக்கு...

2022-12-01 11:34:07
news-image

11 வீரர்களை களமிறக்க இங்கிலாந்து தயார்,...

2022-12-01 09:44:27
news-image

சி குழுவில் முதலிடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும்...

2022-12-01 09:40:00
news-image

3 ஆவது ஒருநாள் போட்டியில் ஆப்கானை...

2022-11-30 23:33:27
news-image

நடப்புச் சம்பியன் பிரான்ஸை வென்றது டுனீசியா

2022-11-30 23:06:06
news-image

உலகக் கிண்ண 2 ஆவது சுற்றுக்கு...

2022-11-30 22:38:19
news-image

சி குழுவில் பிரான்ஸுக்கு அடுத்ததாக 2...

2022-11-30 18:39:04
news-image

இந்தியா, நியூ ஸிலாந்து 3 ஆவது...

2022-11-30 17:19:20