இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே சேன் வில்லியம்ஸின் சதத்துடன் 296 ஓட்டங்களை குவித்துள்ளது.

Image

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியுடன் விளையாடி வருகிறது.

தொடரின் முதல் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணிக்கு ஆரம்ப வீரர்கள் சிறந்த பங்களிப்பினை வழங்கினர்.

Image

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 296 ஓட்டங்களை குவித்தது சிம்பாப்வே.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய தகுத்ஸ்வனாஷே கைடானோ 42 ஓட்டங்களையும், ரெஜிஸ் சகப்வா 72 ஓட்டங்களையும் பெற, நான்காவது வீரராக களமிறங்கிய சேன் வில்லியம்ஸ் சதம் விளாசினார்.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் சமிக கருணாரத்ன 3 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப் மற்றும் ஜெஃப்ரி வாண்டர்சே தலா 2 விக்கெட்டுகளையும், கமிந்து மெண்டீஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 297 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.